ரிலீசுக்கு தயாராகிய 5 முன்னணி நடிகைகள் நடித்த Her திரைப்படம்

மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ரிலீசுக்கு தயாராகிய 5 முன்னணி நடிகைகள் நடித்த Her திரைப்படம்
Published on

மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் ஃபரைடே, லா பாயிண்ட் மற்றும் சேரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார். இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் இரண்டு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடி ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான மனோரமா மாக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் 5 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. படத்தின் கதையை அர்ச்சனா வாசுதேவ் எழுதியுள்ளார். இப்படத்தில் ஊர்வசி, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்வதி திருவோத்து, லிஜோமோல் ஜோஸ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com