என் மலர்
சினிமா செய்திகள்
நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்து உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர் மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார்.
ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய துணை நடிகை அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சி மூலமாக சென்றுள்ளார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றி துணை நடிகை விழா முடிவடைந்ததும், பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று பரபரப்பு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் பெயர் கணேச பாண்டியன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் கால் டாக்சிகளில் பயணம் செய்பவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பயணிகள் எழுப்பி உள்ளனர்.
- 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
- மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.
இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.
மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார்.
- தேரே இஷ்க் மே படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
- தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
- டியூட் படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், டியூட் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 3 கான்களும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
- நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார்.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்" நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஷாருக் கான், "அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய அமீர் கான், "நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்" என்று தெரிவித்தார்.
- படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
- ‘ஆரோமலே’ திரைப்படம் அடுத்த மாதம் 7-ந்தேதி வெளியாகிறது.
'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.
இதனை தொடர்ந்து, கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த நிலையில், 'ஆரோமலே' திரைப்படம் அடுத்த மாதம் (நவம்பர்)7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஆரோமலே' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
- டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், டியூட் படத்தில் நடித்த BTS காட்சிகளை பிரதீப் ரங்கநாதன் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொழுது போக்கினையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தளம் - பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'They Call Him OG' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தளம் உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 42 மணி நேரத்தில் 60 நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது.
இந்த சாதனை- ஏற்கனவே அறிமுகமான ChatGPT, Instagram,TikTok, Spotify போன்ற உலகளாவிய பிரபலமான தளங்களை விட.. விரைவாக ஒரு மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அத்துடன் மக்களால் அதிகளவில் விரும்பப்பட்ட சுயாதீன தளமாகவும் OnceMore.io புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்த தளம் குறித்தும் , இதன் சிறப்பம்சம் குறித்தும், 'OG' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் இயக்குநர் சுஜித் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் இந்த தளத்தின் பிரத்யேகமான உள்ளடக்கத்தை வெளியிடுவதற்காக ரசிகர்களையே 'சிறப்பு விருந்தினர்'களாக அழைப்பு விடுத்தார்.
இதற்கு ரசிகர்கள் முழு உற்சாகத்தில் பதிலளித்தனர். விளையாட்டுக்கள்- ஒவ்வொரு பயனர்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் அட்டைகள் - தங்களின் உற்சாகத்தின் அனுபவ பகிர்வு - என' OG' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்குள் நுழைவதை அவர்கள் விரும்பினர்.
இதன் காரணமாக சில மணி நேரங்களுக்குள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மீம்ஸ்கள்- ரசிகர்களின் ரியாக்ஷன்- ரசிகர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் - அவர்களின் பெயர் மற்றும் பிரத்யேக எண்ணுடன் கூடிய டிஜிட்டல் அட்டைகள் - ஆகியவற்றை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர்.
இதனால் ரசிகர்களின் டிஜிட்டல் அட்டைகளால் இந்த தளம் நிரம்பி வழிந்தது. அத்துடன் தங்களுடைய பெயர் மற்றும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்ஸாக இடம்பெறச் செய்து அதிர வைத்தனர்.
ரசிகர்கள் கூட்டாக கலந்துகொண்டு 'OG 'திரைப்பட கொண்டாட்டத்தின் பின்னணியை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தையும் தொடங்கினர். அத்துடன் இந்த நிகழ்வை உலகளாவிய திரைப்பட ரசிகர்களின் பங்களிப்புடன் கூடிய மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் மாற்றினர்.
OnceMore.io - ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அதற்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் , அது தொடர்பாக அவர்கள் விரும்பும் கதைகள் மற்றும் உருவாக்கத்தை உடன் இணைத்துக் கொள்ளவும் இதுவரை இல்லாத வகையிலான புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை இந்த தளம் உருவாக்கியுள்ளது.
ஏஐ ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் இந்த தளம் - ஏ ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் புதிய வகையிலான பொழுதுபோக்கினை உருவாக்கி வருகிறது.
இந்த தளம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை வழங்குவதற்காக மற்றுமொரு பான் இந்திய அளவிலான திரைப்படத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமிதமான தருணமாக அமைந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த புதுமை மற்றும் ரசிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படைப்பாற்றல் இவை இரண்டும் இந்தியாவில் இருந்து தான் வர இயலும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார்.
இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.
இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார்.
இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.
கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
ஒரு மாஸ் ஆக்ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார். படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு.
சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.
இயக்கம்
மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.
படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது.
இசை
திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.
ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
- 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது
- காந்தாரா சாப்டர் 1 30 நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- பாத்ரூமில் அழும் காட்சியில் பிரதீப் ரங்கநாதன் கண்கலங்க வைக்கிறார்.
- சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.
ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.
இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.






