தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தேரே இஷ்க் மே படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on: 

தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com