என் மலர்
சினிமா செய்திகள்
- 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது
- காந்தாரா சாப்டர் 1 30 நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- பாத்ரூமில் அழும் காட்சியில் பிரதீப் ரங்கநாதன் கண்கலங்க வைக்கிறார்.
- சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.
ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.
இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
- படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.
- சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது.
ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காந்தாரா சாப்டர்-1' சர்வதேச அளவில் வெளியான இந்த படம் திரைக்கு வந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.
இது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ள டிரெண்டிங் பட்டியலில் முதல் 2 இடங்களை ரிஷப்ஷெட்டியும், ருக்மிணி வசந்தும் பெற்றுள்ளனர்.
ரிஷப் முதல் இடத்தையும் 2-ம் இடத்தை ருக்மிணி வசந்தும், 3-வது இடத்தில் மோனாசிங், 4-வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் பெயரும் இடம் பெற்று உள்ளன.
- இப்படத்தை இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.
- ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கல்யாணத்தில் நடக்க உள்ள பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதை டீசரில் சொல்லப்பட்டுள்ளது.
இதோ 'தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வேடிக்கையான மேக்ஸ் டீஸர்! குழப்பத்தை அனுபவியுங்கள்... என்று நடிகர் கார்த்தி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
- ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
- குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும் என்று அப்பா பசுபதி மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் அக்கா ரெஜிசா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் பெரிய கபடி வீரனாக ஆக வேண்டும் என்று துருவ் விக்ரம் ஆசைப்பட்டு வருகிறார்.
அதே ஊரில் வசிக்கும் அமீரும், லால்-லும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இந்த சண்டை துருவ் விக்ரம் கபடி விளையாட்டிற்கு முட்டுக் கட்டியாக இருக்கிறது.
இறுதியில் தடைகளை கடந்து துருவ் விக்ரம் கபடி விளையாட்டில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துருவ் விக்ரம், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். விளையாட்டு வீரருக்கான உடல் அமைப்பு, உடல் மொழி என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாதிக்க முடியாத ஏக்கம், காதல், என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விடாமல் காதலிப்பது, காதலுக்காக வீட்டை எதிர்த்து சண்டை போடுவது என கவனிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் பசுபதியின் நடிப்பு. மகனை நினைத்து வருந்துவது, அடிவாங்குவது, என கிடைக்கும் இடங்களில் எல்லாம் அசத்தி இருக்கிறார். பாசமான அக்காவாக மனதில் பதிந்து இருக்கிறார் ரெஜிசா விஜயன்.
ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன், எப்படி வாழ்க்கையில் முன்னேறி வருகிறான் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒரு பிளாஷ்பேக் சொல்லும் போது அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் வருவதை தவிர்த்து இருக்கிறார். வழக்கமாக அவருக்கே உரிய குறிப்பிட்ட சமூகத்தை பற்றியே படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் நீளமும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவீனமாக அமைத்து இருக்கிறது.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
- மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
- கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படம் இன்று வெளியானது. இதையொட்டி முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. திரைப்படத்தை பார்த்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.
படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பைசன் - காளமாடன் வெல்லட்டும்! என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- 33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.
- எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை.
கன்னட சினிமாவில் பிரபலமான ரச்சிதா ராம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் திடீர் வில்லியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.
33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.
இந்நிலையில் ரச்சிதா ராம் திருமண பந்தத்தில் இணையவுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.
எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது'', என்றார்.
இதனால் சந்தோஷம் பாதி, கவலை மீதி என்ற ரீதியில் ரசிகர்கள் வாழ்த்துகளை 'கமெண்ட்'டுகளாக அளித்து வருகிறார்கள்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.
இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
- பைசன் பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
- பைசன் படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தின் திரைக்கதை புனைவு என்றும் உண்மை சம்பவம் இல்லை என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பைசன் (காளமாடன்) இத்திரைப்படம் எனது பால்யகால நாயகன் "மணத்தி" P.கணேசன் அவர்களின் வாழ்வையும் உழைப்பையும் கபடியையும் அவர் அடைந்த பெரு வெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இத்திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு முழு புனைவு திரைக்கதையே ஆகும். ஆகவே இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் என இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர யாரையும் எந்த நிகழ்வுகளையும் உண்மையாக காட்டப்படவேயில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
பைசன் (காளமாடன்) என்பவன் நிச்சயம் ஒருவன் அல்ல, தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்க துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன்தான் என் காளமாடன்" என்று தெரிவித்துள்ளார்.
- டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களும் தீபாவளியை ஒட்டி நாளை திரைக்கு வருகின்றன.
- ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவை கொண்டாடத் தொடங்குவோம்.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அதன்படி நாளைய தினம் துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக உள்ளன.
இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களும் வெற்றி பெறவேண்டும் என்று நடிகர் சிம்பு வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த தீபாவளி நம் இளைஞர்களுடையது. டீசல், டியூட், பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை, கடின உழைப்பால் உருவாகியுள்ளன. ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவை கொண்டாடத் தொடங்குவோம். உள்ளே நுழைந்தவர்களை, நுழையக் காத்திருப்பவர்களை ஆதரித்து, சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம். அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். தீபாவளி வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
- இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பி கட்ன கதை
நடிகர் நட்டி, ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வருகிற 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.






