என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள் - தீபாவளி வாழ்த்து கூறிய சிம்பு
    X

    டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள் - தீபாவளி வாழ்த்து கூறிய சிம்பு

    • டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களும் தீபாவளியை ஒட்டி நாளை திரைக்கு வருகின்றன.
    • ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவை கொண்டாடத் தொடங்குவோம்.

    தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அதன்படி நாளைய தினம் துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக உள்ளன.

    இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் டீசல், டியூட், பைசன் ஆகிய 3 படங்களும் வெற்றி பெறவேண்டும் என்று நடிகர் சிம்பு வாழ்த்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த தீபாவளி நம் இளைஞர்களுடையது. டீசல், டியூட், பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை, கடின உழைப்பால் உருவாகியுள்ளன. ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவை கொண்டாடத் தொடங்குவோம். உள்ளே நுழைந்தவர்களை, நுழையக் காத்திருப்பவர்களை ஆதரித்து, சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம். அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். தீபாவளி வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×