என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    64-வது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகர், நடிகைகான விருது வழங்கப்பட்டுள்ளது. #FilmfareAwards #FilmFare
    64-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலா கலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சிறந்த நடிகராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘சஞ்சு’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை வென்றார். அந்த படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.

    சிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்து இருந்தார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.



    வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுக்கப்பட்டது.

    ‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் நடிகர்- நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு நான் இசையமைக்க வில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார். #YuvanShankarRaja
    ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு பல காரணங்களால் படத்தை முடிக்காமலேயே யுவன் தயாரிப்பை கை விட்டார்.

    முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடர இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

    படம் வெளிவருமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில் எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் படத்தின் தமிழ் உரிமையைப் பெற்றார்.



    நேற்று படத்தின் இயக்குநர் சக்ரி, நடிகை நயந்தாரா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யாரும் இல்லாமல் ஒரு டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. டிரைய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

    புதிதாக வந்த தயாரிப்பாளருக்கும் யுவனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் எனப் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியிருக்கிறார். #Ilayaraja
    சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது:- ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது.

    இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்.’

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா? என்று கேட்ட போது என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். மூன்றே நாட்களில் படமாக்கலாம்’ என்றார்.



    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தான் இசையமைத்த பாடல்களை இளையராஜா பாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆரவாரம் செய்து அவரை திக்குமுக்காட வைத்தனர்.
    அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது என்று நடிகர் ஜீவா, கீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். #Kee #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தற்போது ‘கீ’ படத்தை தயாரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜீவா பேசும்போது, ‘வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். 



    தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. 

    இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும். இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அனைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.
    ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு.

    படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. தனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வைப்பார்கள்.

    ஆனால் அதையும் மீறி சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுவது உண்டு. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63-வது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த கதையின் விவரம்:-

    கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.



    அப்போது கொலைக்கு பின்னால் பயங்கர சதித்திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    ஏற்கனவே விஜய்யின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வந்தது. அதை விட விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
    டி.வி.சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் சிக்சர் படத்தில் இணைந்துள்ளார். #VaniBhojan
    சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மா.கா.பா.ஆனந்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளில் பிரியா பவானி சங்கரும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

    தற்போது மற்றொரு கதாநாயகி சின்னத்திரையிலிருந்து அறிமுகமாக உள்ளார். சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் வைபவ் நடிக்கும் சிக்சர் படத்தில் இணைந்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் பலாக் லால்வாணி வைபவக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வாணி திரையுலகில் நுழைகிறார்.

    சஸ்பென்ஸ் திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். படத்தில் இணைந்தது குறித்து வாணி போஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பழைய நண்பர் நிதின் சத்யா. அவரால் இந்த அறிமுகப் படம் கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். #VaniBhojan
    நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்த பதிலை பார்ப்போம்.... #Samantha #NagaChaitanya
    தமிழில் சமந்தா நடிப்பில் அடுத்து சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாக இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மிஷ்கின் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    பகத் பாசிலுக்கு மனைவியாக வேம்பு என்ற வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். அவர் வரும் முதல் காட்சியே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் தாயான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். என் குழந்தை தான் என் உலகமாக இருக்கும். நான் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு நடந்தது போன்று என் குழந்தைக்கும் நடக்க விடமாட்டேன்.

    அதனால் நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதை இப்போது சொல்ல முடியாது. இதற்கு மேல் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் நாகசைதன்யாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.’

    இவ்வாறு அவர் கூறினார். #Samantha #NagaChaitanya

    ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.

    விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

    இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் தலைவி படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும்.

    ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    கவுதம் மேனன் இயக்கும் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார். லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


    எங்களால் ஜெயலலிதாவாக கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார், தென் இந்தியாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு இந்தி நடிகையை, கவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை உண்டாக்கும் நடிகையை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
    முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ‌ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார்.

    ஆனால், ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக செய்ததுபோல இந்தப் படத்தில் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தன் நடிப்பின் மூலமாகவே வயது முதிர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று கீர்த்தி முடிவெடுத்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இன்னொரு படம் படையப்பா 2-ம் பாகமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர். முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை சொல்லி இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார்.

    படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அரங்குகள் அமைக்கும் பணியையும் ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் (எப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.

    இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசிவருகிறார்கள். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
    ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி நடிப்பில் கிரிஷ்ணா பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எம்பிரான்’ படத்தின் விமர்சனம். #Embiran #EmbiranReview
    தாத்தா மௌலி அரவணைப்பில் இருக்கிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி. இவர் டாக்டராக இருக்கும் நாயகன் ரெஜித் மேனனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். தன்னுடைய காதலை எப்படி ரெஜித்திடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த விஷயம் தாத்தா மௌலிக்கு தெரிய வருகிறது.

    ரெஜித்திடம் இவரின் காதலை சொல்ல, ராதிகா ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு செல்கிறார் மௌலி. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட தாத்தா மௌலி விபத்தில் இறக்கிறார். நாயகி ராதிகா ப்ரீத்தி கோமா நிலைக்கு செல்கிறார். 

    இந்நிலையில், ரெஜித் மேனனுக்கு, ராதிகா ப்ரீத்தி பற்றிய கனவுகள் வருகிறது. பின்னர் ராதிகாவின் கோமா நிலைமை அறிந்து அவருக்கு உதவி செய்கிறார். 



    இறுதியில் ராதிகா ப்ரீத்தி கோமா நிலைமையில் இருந்து மீண்டாரா? காதலில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகனாக நடித்திருக்கும் ரெஜித் மேனன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அழகாக இருக்கும் இவர், சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    ஒருதலை காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ்ணா பாண்டி. வழக்கமான கதையை வித்தியாசமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சிறிய கதையை மெதுவாக சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபட வில்லை. இயக்குனர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. படத்தொகுப்பும் கை கொடுக்கவில்லை.



    புகழேந்தியின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘எம்பிரான்’ எழவில்லை.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி போட்ட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63
    இந்தியில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தமிழ் கதாநாயகர்களுக்கு வில்லன்களாக நடிப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் இந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார்.

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.



    மேலும், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

    அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
    ×