என் மலர்

  சினிமா

  அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது - ஜீவா
  X

  அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது - ஜீவா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது என்று நடிகர் ஜீவா, கீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். #Kee #Jiiva
  நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தற்போது ‘கீ’ படத்தை தயாரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜீவா பேசும்போது, ‘வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.   தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. 

  இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும். இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அனைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.
  Next Story
  ×