என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி போட்ட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63
    இந்தியில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தமிழ் கதாநாயகர்களுக்கு வில்லன்களாக நடிப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் இந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார்.

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.



    மேலும், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

    அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
    விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் தலைப்பை யார் தேர்வு செய்தார்கள் என்பதை இயக்குனர் கூறியிருக்கிறார். #Kolaigaran
    இசையமைப்பாளராக இருந்து முன்னணி நடிகராகி இருக்கும் விஜய் ஆண்டனி அடுத்து அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் படம் கொலை காரன். படம் பற்றி ஆண்ட்ரூ லூயிஸ் அளித்துள்ள பேட்டியில் ’நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.

    கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார்கள்.



    விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். இந்த டைட்டிலை விஜய் ஆண்டனிதான் தேர்வு செய்தார்’. இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய்யுடனும், அஜித்துடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Vijay #Ajith
    ‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.



    இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

    நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
    பாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha
    போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் பாபி சிம்ஹா. இவரது நண்பர் சதீஷ். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான ரம்யா நம்பீசன், தனது பத்திரிகையாளர் தோழியை வைத்து பாபி சிம்ஹாவின் பேட்டிக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ரம்யா நம்பீசனின் தோழி வராததால், பாபி சிம்ஹா பேட்டி வேண்டாம் என்று சொல்லுகிறார்.

    அதே நேரத்தில் அந்த தோழி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட செய்தி வருகிறது. இந்த கொலையில் அவருடைய காதலர் சிக்குகிறார். இதை பாபி சிம்ஹா விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பிடிப்பட்டவர் கொலை செய்யவில்லை என்றும் வேறொரு சிறுவன் தான் கொலை செய்தான் என்பதை அறிந்துக் கொள்கிறார். 



    மேலும் இதுபோல் சிறுவர்களால் ஆங்காங்கே சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் வாதியான மதுபாலா செயல்படுவது பாபிசிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.

    இறுதியில், மதுபாலா அவ்வாறு செய்ய காரணம் என்ன? மதுபாலாவை பாபி சிம்ஹா எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக அக்னி தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம். துப்பறியும் காட்சிகளிலும் கோபப்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.



    அக்னி தேவி என்ற வில்லி அரசியல்வாதியாக மதுபாலா நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் சில உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கிறது. ஒரு சில இடங்களில் மிகைத்தனமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

    சதீஷுக்கு பாபியுடனே பயணித்து விசாரணையை கலகலப்பாக்கும் வேடம். எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், ஆகியோர் குணச்சித்திர பாத்திரங்களாக வருகின்றனர். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் இரண்டே காட்சிகளில் வந்து போகிறார்.



    சுவாதி கொலை உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களை இணைத்து கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. நாவலில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையிலும் இருக்கிறது. ஒரு கலவரத்தால் பலருடைய வாழ்க்கை முறை மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள் ஜேபிஆர், ஷாம் சூர்யா. நடிக, நடிகைகளின் மிகைத்தனமான நடிப்பு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் காதல், பாடல் காட்சிகள் என எந்த வேகத்தடையும் இல்லாமல் பரபரப்பான ஒரு துப்பறியும் படமாக அக்னி தேவி அமைந்துள்ளது.

    ஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் இசையும் திகிலை கூட்டுகின்றன. 

    மொத்தத்தில் ‘அக்னி தேவி’ வேகம் குறைவு.
    பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். #VijaySethupathi #SuperDeluxe
    விஜய்சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் விஜய்சேதுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருநங்கை வேடம் என்பதால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கவில்லை. அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நடித்தேன். அது அழகாக எழுதப்பட்ட கதை. திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. அந்த வேடத்தில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள்.

    சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. நடிக்க வரும்போது நடித்தால் மட்டும்போதும் என்று நினைத்தேன். இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.



    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் அதை தெரிவிப்பதற்கு தேர்தல் உள்ளது.

    எனவே அனைவரும் ஓட்டு போட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து யாரும் விலகக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒரு நாள் கூத்து படம் மூலம் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். #NivethaPethuraj
    ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் புதிதாக தமிழ் படமொன்றிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

    நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்துடனும், கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.



    இந்த புகைப்படங்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்ததையும் விமர்சித்து வருகிறார்கள்.
    மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Sivakarthikeyan #VigneshShivan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இப்படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.



    இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று திரிஷா கூறியுள்ளார். #Trisha
    திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.



    இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, ’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்திருக்கிறார். #Thalpathy63 #Vijay #ThalapathyVijay
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.



    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #JackieShroff
    பாலிவுட் நடிகையும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மந்த்ரா பேடி, தனது இளமை ரகசியம் பற்றி கூறியிருக்கிறார். #MandiraBedi
    இந்தி நடிகை மந்த்ரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர்.

    கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து டிவியில் நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 45 வயதாகும் மந்திரா பேடி தற்போதும் தனது உடற்கட்டை கனக்கச்சிதமாக பராமரித்து வருகிறார்.



    தனது கவர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் ஷார்ட்ஸ் மற்றும் கச்சை அணிந்த கிக்கான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மந்திரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின் அதிகாலை 5 மணி காட்சி மூலம் தனது ரசிகர்களை காண வருகிறார். #Nayanthara #Airaa
    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படம் வருகிற 28-ந்தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு சென்னையில் காலை 5 மணி காட்சி போடப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஜே.ஜே.ஆர் புரொடக்‌‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

    சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சர்ஜுன். இவரது இரண்டாவது படம்தான் ‘ஐரா’. நயன்தாரா, இதில் பவானி மற்றும் யமுனா என்னும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.



    மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29ந்தேதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ‘ஐரா’ படம் வெளியாகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    பெரிய ஹீரோக்களின் படங்களைத் தான் அதிகாலை 5 மணிக்கு திரையிடுவார்கள். சிறிய பட்ஜெட் படங்களுக்கும், சிறிய நடிகர்கள் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி திரையிடுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ படம் காலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது. இதற்காக விஷ்ணு விஷாலும், ஆர்.ஜே.பாலாஜியும் டுவிட்டரில் காரசாரமாக மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ‘ஐரா’ படமும் காலை 5 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது.
    பிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். #Vadivukkarasi
    பிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

    இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகள் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.



    நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ×