என் மலர்
சினிமா செய்திகள்
வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரன் படத்தில் அக்டோபர் மாத ராசியை பின்பற்ற இருக்கிறார்.
வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கருணாஸ் மகன் கென் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தனுஷ் அப்பா மகன் என்ற இரு பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வந்தன. தற்போது வந்துள்ள தகவலின்படி, தனுஷ் ஒரே கதாபத்திரத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.

மேலும் அக்டோபர் இரண்டாம் தேதி அசுரனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற அக்டோபர் 17ந்தேதி தான் வெற்றிமாறன்- தனுஷின் கூட்டணியில் வடசென்னை வெளியானது. அந்த அக்டோபர் ராசியில் அசுரன் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் அசுரன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்ஷரா ஹாசன், என் அப்பாவும் ரஜினியும் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்ஷரா ஹாசன் சென்னையில் இன்று மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:-ரஜினியுடன் கமல் கூட்டணி அமைத்தால் வரவேற்பீர்களா?
பதில்:- இருவரும் நெருங்கிய நண்பர்கள். தொடக்கம் முதலே சேர்ந்து பயணித்தவர்கள். எனவே ரஜினியுடன் அப்பா (கமல்) அரசியலில் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி.
ரஜினி சார் வந்தாலும் ஓ.கே... வராவிட்டாலும் ஓ.கே.தான். அவர்கள் இணைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு.

கே:- கடந்த நவம்பர் மாதம் உங்கள் ஆபாச படம் பரவியதாக வதந்தி வந்ததே. அதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?
ப:-அந்த சம்பத்திற்கு பிறகுதான் எனக்கு பெரிய பக்குவம் வந்தது. பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்த சூழலை பெண்கள் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களை ஒருவர் தவறாக அழைத்தால் அவரிடம் முடியாது என்று தைரியமாக சொல்ல வேண்டும். எதிர்த்து நின்று போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'கடைசி விவசாயி' படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதி அடுத்ததாக 'கடைசி விவசாயி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.
விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கிறாராம். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெகன், மனிஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
காமெடி நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடிக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’. இந்தப் படத்தின் கதையமைப்பு வித்தியாசமாக இருப்பது போல், இந்தப்படத்தில் இடம் பெறும் காமெடி காட்சிகளையும் வித்தியாசமாகப் படமாக்கி வருகிறார்கள்.
இதில் - காமெடி நடிகர் ஜெகன், மனீஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா, வில்லனாக கவிஞர் பிறைசூடன், இந்திரஜித், சேரன் ராஜ், வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், சாம்ஸ், விவேக்ராஜ், ரவி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சிவராஜ், இசை - கவின்சிவா, எடிட்டிங் - துரைராஜ், கலை - ராகவா குமார், மக்கள் தொடர்பு - பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு நிர்வாகம் - சைதை செங்குட்டுவன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன், தயாரிப்பு - ராஜாமணி தியாகராஜன், டைரக்ஷன் - முருகலிங்கம்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சித்தார்த், அரவிந்த் சாமியுடன் புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்’. வரும் ஜூலை 19ந்தேதி வெளியாகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்’ படத்தின் டிரெய்லர், யூடியூபில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இப்படத்தின் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய வெர்ஷன்களின் டிரெய்லர்களும் சமீபத்தில்தான் வெளியாயின. இதில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, யார் யார் டப்பிங் பேசியிருக்கிறார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.

இந்தி பதிப்பில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசுகின்றனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசுகின்றனர்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவி படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம் ‘ஜீவி’. இதில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிதந்திருந்தனர்.
முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விமர்சன ரீதியாகவும் ‘ஜீவி’ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் மற்றும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படங்களின் 2 மற்றும் 3-ம் பாகங்களும் திரைக்கு வந்தன.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த படத்தை ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க உள்ளதாகவும் அவர்கள் இல்லை என்றால் விஜய்யை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். ரஜினி, கமல் இருவரும் அரசியலில் பிசியாக உள்ளதால் ஷங்கர் விஜய்யை வைத்து எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறார்கள்.

விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய். அதன் பின்னர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளார்.
முதல்வன் படத்தை இயக்கும் போது ஷங்கரின் தேர்வாக விஜய் இருந்ததும், சில காரணங்களால் அவர் ஏற்று கொள்ளாமல் போகவே இறுதியாக அந்த படம் அர்ஜூனிடம் சென்று, மிகப்பெரிய வெற்றி படமானது.
படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக வந்து கலக்கி இருப்பார். இறுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் ஆவார். இதன் தொடர்ச்சி என்பதால் விஜய்யும் முதல் அமைச்சர் வேடத்தில் தான் நடிப்பார் என்கிறார்கள். படத்தில் அர்ஜூனையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. அர்ஜூன் நடித்தால் அது வில்லனாகவோ அல்லது குணச்சித்திர வேடமாகவோ இருக்கலாம்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கூர்கா’ பட டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருக்கிறார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்படம் வருகிற 12-ந் தேதி திரைக்கு வருகிறது.
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த தங்கல் பட நடிகை சைரா வாசிமை, நடிகர் சித்தார்த் விமர்சித்து கூறியிருக்கிறார்.
அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தின் மூலம் 15 வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் சைரா வாசிம். இந்த படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்து முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானார். அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அடுத்து நடித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படமும் வெற்றிபெற்று மேலும் புகழ்பெற்றார்.
தி ஸ்கை ஈஸ் பிங்கி என்ற படத்திலும் நடித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவரான சைரா வாசிம் மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “5 ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறிவிட்டது. நான் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லை. திரையுலக வாழ்க்கை எனது நம்பிக்கை மற்றும் மத உறவுகளில் தலையிடுவதால் சினிமா எனக்கு பொருத்தமானது இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சைரா வாசிம் விலகல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது முடிவை நடிகர் சித்தார்த் விமர்சித்து கூறியதாவது:-
“இது உங்களுடைய வாழ்க்கை. பிடித்ததை செய்யுங்கள். கலையும், தொழிலும்தான் வாழ்க்கை என்று நான் நம்புகிறேன். இதில் மதத்தை கலக்க கூடாது என்று போராடுகிறோம். அதற்கு இங்கு வேலை இல்லை. உங்கள் மதம் காரணமாக விலகுவதாக இருந்தால் நீங்கள் சினிமா துறைக்கு பொருத்தமானவர் இல்லை” என்று கூறியுள்ளார்.
ராட்சசி படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்த முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
`குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து ’ஜாக்பாட்’ படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'காப்பான்' திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 'சிறுக்கி' என தொடங்கும் அந்த பாடல் வரும் 5ந் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.






