என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ
Byமாலை மலர்4 July 2019 8:30 AM GMT (Updated: 4 July 2019 8:30 AM GMT)
பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் மற்றும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படங்களின் 2 மற்றும் 3-ம் பாகங்களும் திரைக்கு வந்தன.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த படத்தை ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க உள்ளதாகவும் அவர்கள் இல்லை என்றால் விஜய்யை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். ரஜினி, கமல் இருவரும் அரசியலில் பிசியாக உள்ளதால் ஷங்கர் விஜய்யை வைத்து எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறார்கள்.
விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய். அதன் பின்னர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளார்.
முதல்வன் படத்தை இயக்கும் போது ஷங்கரின் தேர்வாக விஜய் இருந்ததும், சில காரணங்களால் அவர் ஏற்று கொள்ளாமல் போகவே இறுதியாக அந்த படம் அர்ஜூனிடம் சென்று, மிகப்பெரிய வெற்றி படமானது.
படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக வந்து கலக்கி இருப்பார். இறுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் ஆவார். இதன் தொடர்ச்சி என்பதால் விஜய்யும் முதல் அமைச்சர் வேடத்தில் தான் நடிப்பார் என்கிறார்கள். படத்தில் அர்ஜூனையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. அர்ஜூன் நடித்தால் அது வில்லனாகவோ அல்லது குணச்சித்திர வேடமாகவோ இருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X