என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கடாரம் கொண்டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், சீயான் விக்ரம் பெயர் இந்த படத்துக்கு பிறகு மாறும் என தெரிவித்தார்.
    சென்னை:

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், ராஜ்கமல் நிறுவனம் துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. ஆனால் இதுபோல் அமையும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்து இருக்கிறது. என் முயற்சிகள் எல்லாமே எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் உபயோகப்பட வேண்டும்.

    மீரா படம் வெளிவந்த போது விக்ரம் சிறப்பாக வருவார் என்றே சொன்னேன். சேது படம் விக்ரமுக்கு முன்னதாக வர வேண்டிய படம். 



    கடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும். 

    சீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு அரசாங்கம் அமையும் அளவிற்கு நாங்கள் படம் எடுப்போம். ராஜ் கமல் இனிமேல் சிறந்த படங்களை தயாரிக்கும்.

    ஜூலை 19-ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறோம். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.

    நல்ல படத்தை ஓட்டிக் காட்டுங்கள். தமிழ் திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்தார்.
    கடாரம் கொண்டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால் என்னால் அவரை போல் நடிக்க முடியாது என தெரிவித்தார்.
    சென்னை:

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய அக்ஷரா ஹாசன், இந்த கதாபாத்திரம் சவாலாக இருந்தது.. கடினமாக உழைத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.

    இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், இது எனக்கு 25 படம், இதில் பல படங்களுக்கு கமல் சார் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்றார். 



    படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா கூறுகையில், ராஜ் கமல் தயாரிப்பில் இது எனக்கு 2-வது படம்.  விக்ரம் எனக்கு இந்த படத்தில் நிறைய உதவி செய்தார். எனக்காக தான் இந்த படத்தை கமல் தயாரித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. விக்ரம் சார் படக்குழுவினரை குழந்தை போல் பார்த்துக்கொண்டார். என் குடும்பத்தினரை விட கமல் சார் என்னை ரொம்ப நம்புகிறார் என தெரிவித்தார்.

    படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசுகையில், கமல் சார் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். நான் கமலின் தீவிர ரசிகன். 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால், என்னால் அவரை போல் நடிக்க முடியாது. என் ரோல் எனக்கு ரொம்ப பிடித்தது. ஜிப்ரான் திறமையாக இசையமைத்திருக்கிறார். சண்டை காட்சிகள் ஹாலிவுட் படம் போல் இருக்கும். செட் ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் எனக்கு மைல் கல்லாக அமையும் என குறிப்பிட்டார்.
    சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து மீண்டும் சசிகுமார் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி இணைந்திருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இதில் சசிகுமாரின் பின்னணியில் ‘சும்மா விடுவானா பெரியவர் மகன்’ என்ற வசனம் இடம் பெற்றிருக்கிறது. அந்த ஒரு வசனமே படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா நடிப்பில் உருவாகி வரும் கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.
    சமீபத்தில் வெளியான 'மதுர வீரன்' திரைப்படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் "ஆடை" எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து "வி ஸ்டுடியோஸ்" நிறுவனம் ஸ்ரீ சரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'கண்ணாடி' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

    'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். 

    இசை : தமன், ஒளிப்பதிவு: P.K.வர்மா, படத்தொகுப்பு: K.L.பிரவின், கலை: விதேஷ், ஸ்டண்ட்: 'ஸ்டன்னர்' சாம், பாடல்கள்: யுகபாரதி, நடனம்: ஷெரிஃப், சவுண்ட் டிஸைன்: சம்பத் ஆழ்வார், நிர்வாக தயாரிப்பு: கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு: விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு 

    வேகமாக உருவாகி வரும் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரிடம் வெளியே வந்ததும் முழு விசாரணைக்கும் ஒத்துழைப்பு தருகிறேன் என்று நடிகை வனிதா கூறியிருக்கிறார்.
    நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவும், ஆனந்தராஜூம் பிரிந்து விட்டனர். இதன் பின்னர் ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மகள் ஜெனிதாவுடன் வசித்து வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிதா திடீரென மாயமானார். இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். அதில் தனது மகள் ஜெனிதாவை, வனிதா கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    வனிதா

    இந்த நிலையில், வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆனந்தராஜ், தெலுங்கானா போலீசாருடன் சென்னை வந்தார். மகளை மீட்டு செல்வதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை பொழுது போக்கு பூங்கா வளாகத்தில் போடப்பட்டுள்ள பிக்பாஸ் அரங்குக்குள் சென்று வனிதாவிடம் போலீசார் விசாரணை முயற்சி செய்தனர். 

    வழக்கறிஞர் மூலம் தெலுங்கான போலீசாரின் விசாரணைக்கு வனிதா ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் நான் வெளியே வந்ததும் முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று காணொளி மூலம் போலீஸ் விசாரணைக்கு பதிலளித்திருக்கிறார்.
    அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாட ஷாருக் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
    அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

    ஷாருக் கான், விஜய்

    இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
    இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம்  2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

    விமல், ஓவியா

    இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    45 வயதாகியும் இன்னும் திருமண செய்துக்கொள்ளாத பிரபல இந்தி நடிகைக்கு 3 வயதில் குழந்தை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘தேவ் டி’ படம் மூலம் பிரபலமானவர் மாகி கில். இவர் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் அவரால் முன்னணி நடிகை என்ற நிலையை அடைய முடிய வில்லை. 45 வயதாகும் மாகி கில்லுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி மும்பை சினிமாவில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேட்டி ஒன்றில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாகவும் வரும் ஆகஸ்டு மாதம் அதன் மூன்றாவது பிறந்தநாள் வருவதாகவும் மாகி கில் தெரிவித்துள்ளார்.

    மாகி கில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மீடியாக்களிடம் பேசுவது இல்லை. இத்தனை நாள் ஏன் இதை மறைத்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’நான் ஒன்றும் மறைக்கவில்லை. உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று மீடியா இதுவரை என்னிடம் கேட்டது இல்லை.

    மாகி கில்

    தற்போது கேட்டதால் பதில் அளித்தேன். ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பதில் பெருமையாக உள்ளது. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

    எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்வதற்கான தேவை என்ன? எல்லாம் நம்மை பொறுத்து தான் உள்ளது. திருமணம் செய்யாமலேயே குடும்பம், குழந்தைகளுடன் இருக்கலாம்.

    இவ்வாறு மாகி கில் தெரிவித்துள்ளார்.
    மற்றவர்களுக்கு உதவும் குணம் மக்களிடம் குறைந்து வருவதாக நடிகர் வடிவேலு, சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட விழாவில் வேதனையாக தெரிவித்தார்.
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூரில் அதிகமுடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 5 புரவிகளை கிராம மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற அவர், வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், தண்ணீர் பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்.

    கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    வடிவேலு

    இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்.

    சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது என வேதனை தெரிவித்தார்.
    பிரபல இயக்குனர் இயக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வந்த செய்தி வதந்தி எனக்கூறி ராணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் அண்மையில் ராஜராஜ சோழன் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். 

    இதையடுத்து அவர் 3 ஹீரோக்களை வைத்து மல்டி ஸ்டார் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ராணா, ஆர்யா, சத்யராஜ் நடிக்க இருப்பதாக்கவும் செய்திகள் பரவின. 

    ராணா, பா.ரஞ்சித்

    இந்நிலையில், ராணா இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன்மூலம் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வந்த வதந்திக்கு ராணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 
    தற்போது சசிகுமாரை வைத்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி இருக்கும் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு சுந்தரபாண்டியன் படத்தின் சென்டிமென்ட் அமைந்திருக்கிறது.
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சுந்தரபாண்டியன் மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா பட போஸ்டர்

    இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதே தினத்தில் தான் 2012 ஆண்டு ஜூலை 3ம் தேதி எஸ்.ஆர்.பிரபாகரனின் சுந்திரபாண்டியன் படத்தின் முதல் போஸ்டர் ரிலீசாகி இருக்கிறது. 
    பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.
    நடிகை மீரா மிதுன் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளித்திருந்தார். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேனாம்பேட்டை போலீசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 19-ந்தேதி விசாரணைக்காக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோசடி புகாருக்குள்ளான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இதையடுத்து அவர் நிகழ்ச்சி முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராவதாக விளக்கம் அளித்து இருப்பதாக தெரிகிறது. 

    மீரா மிதுன்

    மகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வனிதா விஜயகுமாரை தேடி பிக்பாஸ் அரங்கம் இருக்கும் இடத்திற்கு தெலுங்கானா போலீசார் வந்துள்ளனர். இதேபோல தேனாம்பேட்டை போலீசாரும் மீரா மிதுனிடம் விசாரணை நடத்த அங்கு செல்ல இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

    ×