என் மலர்
சினிமா செய்திகள்
யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தர்மபிரபு’ திரைப்படத்திற்கு இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
நடிகர் யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ என்ற திரைப்படம் சமீபத்தில் மாநிலம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் இந்து கடவுள்களையும், இந்துக்களையும், மத கோட்பாடுகளையும் விமர்சித்து இருப்பதாக இந்து முன்னணி சார்பில் புகார் கூறப்பட்டது. இந்த படத்தை திரையிடுவதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தியேட்டரில் தர்மபிரபு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர் முன்பு நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அந்த அமைப்பினர் நெல்லை தியேட்டர் முன்பு நேற்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தமிழில் தற்போது பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக மியா ஜார்ஜ் இடத்தை பிடித்துள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட செம ஹிட் அடித்தது.
இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. முதல் பாகத்தில் மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிய படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு செல்ல இருக்கிறார்.
ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகர்-நடிகைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசையும் காதலித்து திருமணம் செய்து அங்கேயே குடியேறி இருக்கிறார். ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே ஆகியோரும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பகிர்’ என்ற வெளிநாட்டு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிட்டனர். நடிகர் நெப்போலியனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ராதிகே ஆப்தேவும் ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார். சுருதிஹாசனும் ஆங்கில தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த வரிசையில் இப்போது காஜல் அகர்வாலும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஹாலிவுட் இயக்குனர் டைரக்டு செய்யும் இந்த படம் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘திருச்சியை சேர்ந்த வக்கீல் பாண்டி என்பவர் என் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருவதாகவும், இதற்கான கட்டணத்தை அவர் கேட்டதற்கு நான் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கூறும் வழக்கில் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு வக்கீல் ஆஜராகி வருகிறார். அதற்கான கட்டணத்தையும் நான் முறையாக செலுத்தி வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வக்கீல் பாண்டி புகார் அளித்துள்ளார்.

இதில் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனுதாக்கல் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் என் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. தற்போது மணப்பாறை போலீசார் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவை குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்ய, போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவும், ஆனந்தராஜூம் பிரிந்து விட்டனர். இதன் பின்னர் ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மகள் ஜெனிதாவுடன் வசித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிதா திடீரென மாயமானார். இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். அதில் தனது மகள் ஜெனிதாவை, வனிதா கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆனந்தராஜ், தெலுங்கானா போலீசாருடன் சென்னை வந்தார். மகளை மீட்டு செல்வதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை பொழுது போக்கு பூங்கா வளாகத்தில் போடப்பட்டுள்ள பிக்பாஸ் அரங்குக்குள் சென்று வனிதாவை கைது செய்ய, போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக நசரத்பேட்டை போலீசுடன் தெலுங்கானா போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
`தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னா நடிக்க உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித்திற்குப் பிறகு பிரபல நடிகை விமானம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்கிறார்.
கமல்ஹாசன் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாதவி. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த மாதவி, தமிழில் 80களில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.
அப்போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது மாதவியே விமானம் ஓட்ட பழகியதோடு, அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டும்தான். அவருக்கு பின் மாதவி லைசென்ஸ் பெற்றுள்ளார்.
பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் மற்றும் சாந்தினி நடிப்பில் மாணிக்க சத்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம்.
புளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - ஹாரிஸ் கிருஷ்ணன், இசை - பி.சி.சிவன், பாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், நடனம் - அசோக்ராஜா, சண்டை பயிற்சி - அம்ரீன் பக்கர், கலை - பிரகதீஸ்வரன், தயாரிப்பு நிர்வாகம் - முத்தையா, விஜயகுமார், தயாரிப்பு - மலர்க்கொடி முருகன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மாணிக்க சத்யா.
படம் பற்றி இயக்குநர் மாணிக்க சத்யா பேசும்போது...
“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.
அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.
நம்பியார், ரகுவரனை போன்று ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று முப்பரிமான வேடங்களிலும் துரை சுதாகர் அசத்தி வருகிறார்.
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம், வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.

அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் துரை சுதாகர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா நேற்று அறிவித்தார். நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் நடித்தாலும் மருத்துவத்தை கை விடமாட்டேன் என "போதை ஏறி புத்தி மாறி" பட நாயகன் தீரஜ் தெரிவித்துள்ளார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் "போதை ஏறி புத்தி மாறி".
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இப்படத்தின் இயக்குனர் கேஆர் சந்துரு பேசுகையில், குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. இது ஒரே வீட்டில் நடக்கும் கதை. இந்த படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும் என்றார்.

இப்படத்தின் நாயகன் தீரஜ் கூறுகையில், சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்டு 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். சமீபத்தில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களில் நடித்து இருந்தார்.
மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் வேதாந்த் வெற்றி பெற்ற தருணம், மதிப்பெண் அட்டவணை ஆகியவை அடங்கிய வீடியோவும், பதக்கங்களுடன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து மாதவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
’உங்கள் அனைவருடைய ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளோடு, வேதாந்த் மீண்டும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஜூனியர் பிரிவில், 3 தங்க பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இது அவர் தனித்து வென்ற முதல் தேசிய பதக்கங்கள். அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அனைவருக்கும் நன்றி’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






