என் மலர்

  நீங்கள் தேடியது "Mia George"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்த மியா ஜார்ஜ், தற்போது தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். #MiaGeorge
  தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தற்போது, லோக்சபா தேர்தலில் இவரை கோட்டயம் பகுதிக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதற்கான பொறுப்பை சமீபத்தில் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.  இதுகுறித்து மியா கூறும்போது, “இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளம் தலைமுறையினரை, குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிகப்படியாக ஓட்டளிக்க வைக்க முயற்சிப்பேன். ஓட்டு போடுவதை தவிர்த்து மற்றபடி எந்தவிதமான தேர்தல் நடைமுறைகளிலும் நான் ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என கூறியுள்ளார் மியா.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான `இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. #IndruNetruNaalai2 #VishnuVishal
  ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ், கருணாகரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் காலத்தை கடந்து பயணிக்கும் (Time Travel) கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

  திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

  சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் உருவாகிய பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார்.

  இதையடுத்து படத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா என்று நடிகர் விஷ்ணு விஷால் கேட்டதற்கு பதில் அளித்த சி.வி.குமார், நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி? என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 

  எனினும் படத்தை யார் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndruNetruNaalai2 #VishnuVishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமரகாவியம், வெற்றிவேல், இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்த மியாஜார்ஜ், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது என்று கூறியிருக்கிறார். #MiaGeorge
  ‘அமர காவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்து பிரபலமானவர் மியா ஜார்ஜ். அதன்பின், ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். தினேசுடன் ‘ஒரு நாள் கூத்து’, விஷ்ணுவுடன் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது:-

  ‘‘பெண்களுக்கு சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்கள் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டி இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் தொல்லைகளை சந்திக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  நடிகையாவதை சிலர் விரும்புவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அதன் பிறகு நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். பெண்கள் விருப்பங்களுக்கு யாரும் தடை விதிக்க கூடாது. மலையாள பட உலகில் பெண்களுக்காக தனி அமைப்பை உருவாக்கி உள்ளனர். எல்லா அமைப்புகளுமே நல்லது செய்யத்தான் இருக்கின்றன.   நான் மலையாள நடிகர் சங்கத்தில்தான் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது.’’

  இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் அமரகாவியம், வெற்றிவேல், எமன் படங்களில் நடித்த மியா ஜார்ஜ், தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். #MiaGeorge
  பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் ‘அமர காவியம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் ‘இன்று நேற்று நாளை’, சசிகுமாருடன் ‘வெற்றிவேல்’, விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’ படத்திலும் நடித்துள்ளார்.

  தற்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும், மியா ஜார்ஜ், தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஸ்கை டைவிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் தன் தாயை பறக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார் மியா ஜார்ஜ்.   மியாவின் அம்மாவுக்கு வானில் பறக்க ஆசை இருந்துள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்புக்கு அழைத்துசென்று அம்மாவோடு சேர்ந்து தானும் பறந்து இருக்கிறார் மியா ஜார்ஜ்.
  ×