என் மலர்

  நீங்கள் தேடியது "Indru Netru Naalai 2"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான `இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. #IndruNetruNaalai2 #VishnuVishal
  ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ், கருணாகரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் காலத்தை கடந்து பயணிக்கும் (Time Travel) கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

  திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

  சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் உருவாகிய பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார்.

  இதையடுத்து படத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா என்று நடிகர் விஷ்ணு விஷால் கேட்டதற்கு பதில் அளித்த சி.வி.குமார், நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி? என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 

  எனினும் படத்தை யார் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndruNetruNaalai2 #VishnuVishal

  ×