search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைசி விவசாயி"

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.


    இதில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் வெளியான படம் ‘கடைசி விவசாயி’.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான படம் 'கடைசி விவசாயி'. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.

    கடைசி விவசாயி

    கடைசி விவசாயி

    இந்நிலையில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான லெட்டர்பாக்ஸ்ட் வெளியிட்ட, 2022-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்கள் பட்டியலில், விஜய் சேதுபதி நடித்த "கடைசி விவசாயி" படம் 2-ஆம் இடம் பெற்றுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் - விக்ரம்

    ஆர்.ஆர்.ஆர் - விக்ரம்

    எஸ்.எஸ்.ராஜமௌலி இயத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 6-வது இடத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 11-வது இடத்திலும் உள்ளது.

    ×