கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.
கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு
Published on

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com