என் மலர்
சினிமா செய்திகள்
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
- இலங்கையில் ஒரு சினிமா எடுத்து, அந்த படத்தை இங்குள்ள தியேட்டர்களில் வினியோகிப்பது என்பது பெரிய விஷயம்.
- எதையோ ஒன்றை மறைக்க, எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ரமணா தயாரித்து, சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ஆகியோர் இயக்கியுள்ள புதிய படம், 'அந்தோணி'. கயல் வின்சென்ட், டி.ஜே.பானு, சுதர்ஷன், அருள்தாஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஈழத்தமிழரின் வாழ்க்கை பற்றிய கதை இது.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசும்போது, "இலங்கையில் ஒரு சினிமா எடுத்து, அந்த படத்தை இங்குள்ள தியேட்டர்களில் வினியோகிப்பது என்பது பெரிய விஷயம்.
ஒரு நாடு போருக்கு பிறகு, சிதைந்த பிறகு, அந்த நாட்டில் வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். குண்டு விழுந்த சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லா வகையிலும் அடக்குமுறையை சந்தித்து வரும் ஜனங்களின் குரல்தான் இந்த படம்.
எதையோ ஒன்றை மறைக்க, எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது. பார்க்க வைக்கப்படும். கேட்க வைக்கப்படும் உலகத்தில் மக்கள் வாழ்கிறார்கள். நம்மை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள். அப்படிப்பட்ட உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியிருப்பதை வாழ்த்துகிறேன்". என்றார்.
- நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
- 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "சிறந்த நாள் இது" என்று தெரிவித்தார்.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.
- கென் கருணாஸ் நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
- படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் 'யூத்' என்ற படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பறந்தேனே' வெளியாகி உள்ளது. இதனை கென் கருணாஸ் பாடியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான முட்ட கலக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், இப்பாடலையும் பாராட்டி வருகின்றனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த 16-வது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக Cochlear Implant அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், தொடர்ந்து பேசிய அவர், " நீண்ட காலமாக என்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை.
அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும். இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருகிறேன். அதுபோல கேட்கும் திறன் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து அவர் பேசியுள்ளது கவனம் பெற்று வருகிறது.
மம்மூட்டி தற்போது மோகன்லாலுடன் இணைந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'பேட்ரியாட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
- டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார்.
- ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
- இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
- நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுதி இயக்கிய படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
கொங்கு வட்டார பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.
கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.
வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த கண்டித்து வருகின்றனர்.
ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் `BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து அவ்வப்போது ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.






