என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரிதுன் இயக்கத்தில் மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் முன்னோட்டம்.
    மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு வந்தது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.

    படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ‘’எங்களது படத்திலிருந்து மீனா மினிக்கி.... மற்றும் இறகி இறகி...., கனவுல உசுர..... என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.

    முன்னோட்டம்
    படக்குழுவினர்

    அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்’’.

    நினைவோ ஒரு பறவை படத்தை ரிதுன் இயக்க யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

    ஸ்ருதிஹாசன்
    ஸ்ருதிஹாசன் - பாலகிருஷ்ணா

    முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான 'க்ராக்' படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இயக்குனர் சோலி ஜாவோ இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இட்டர்னல்ஸ் படத்தின் விமர்சனம்.
    பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழிக்கவும் மனித இனத்தை காப்பாற்றவும் அனுப்பப்படுகிறார்கள். 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் தனி சக்தி இருக்கிறது. இவர்களுக்கு வயதும் ஆகாது, கொல்லவும் முடியாது.

    இந்த 10 சூப்பர் ஹீரோக்களும் போராடி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதே 10 சூப்பர் ஹீரோக்களை அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று, ஒவ்வொருத்தராக அழிக்கிறது. மேலும் சூப்பர் ஹீரோக்களின் சக்தியையும் எடுத்துக் கொள்கிறது.

    விமர்சனம்

    இறுதியில் அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் எப்படி வந்தது? சூப்பர் ஹீரோக்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டார்களா? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இட்டர்னல்ஸ். ஆனால், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். சாகச காட்சிகள், சண்டைக்காட்சிகள் சிறிது நேரமே இடம்பெறுகிறது. 

    சாகச காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. எண்ட்கேம் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் புதிய கதை என்பதால், கதைக்கு மட்டுமே அதிக முக்கியத்தும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சோலி ஜாவோ. 

    விமர்சனம்

    ஒளிப்பதிவாளர் பென் டேவிஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. இசையமைப்பாளர் ராமின் டிஜவாடி பின்னணி இசை சிறப்பு. 

    ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், கிட் ஹரிங்டன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, ஹரிஷ் படேல், பாரி கியோகன், லாரன் ரிட்லோஆஃ என பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘இட்டர்னல்ஸ்’ சுவாரஸ்யம் குறைவு.
    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
    'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 

    ரஜினி

    அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவா, பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. 

    அவையெல்லாம் ஓய்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது. 

    பிரபுதேவா

    அவர் ஒரு பெண் மருத்துவர் என்றும், பரிசோதனை செய்யப்போனபோது, அவரிடம் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
    தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், ஆர்யா, விஷால் நடித்த எனிமி படமும் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தனர். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் பிரபலமான ஒரு தியேட்டரில் எனிமி படத்தின் இரண்டாம் பாதியை முதலில் போட்டிருக்கிறார்கள். 

    என்டு கார்டு வந்தபோது தான் அது இரண்டாம் பாதி என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் கத்தி கூச்சலிடவே போலீசாரை வைத்து ரசிகர்களை சமாதானம் படுத்தி இருக்கிறார்கள்.

    விஷால் - ஆர்யா

    அந்த தியேட்டரில் நடந்ததை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டாம் பாதியை முதலில் பார்த்தவர்கள், என்னடா படம் இது என்று அந்த வீடியோவில் சொல்வதை பார்க்க முடிகிறது.

    என்டு கார்டு வரும் வரைக்குமா இது இரண்டாம் பாதி என்று தெரியாமல் பார்த்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்டதற்கு, ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டதால் கடைசியில் தான் பெயர் எல்லாம் வரும் என்று நினைத்துவிட்டோம் என்று படம் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
    நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது.

    விஜய்

    அதையடுத்து சென்னை, டில்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதத்தை கடந்து விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கியத்துவமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது.
    ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    டைகர்
    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

    ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார்.
    நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.

    ஸ்ருதிஹாசன்

    ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். தனது காதலருடன் ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வைத்தியராக இருக்கிறார் சத்யராஜ். இவர் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ.கருப்பையா என்பவர் விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜூக்கும், பழ கருப்பையாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பிரச்சனை நீதிமன்றம் வரை செல்கிறது. 

    இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரோ 12ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிரார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் தன் மகன் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். 

    விமர்சனம்

    அதன்பின் இருவருக்கும் இடையே சில சில தகராறுகளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கடைசியில் அந்த மூலிகை மலையை சத்யராஜ் கைப்பற்றினாரா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சத்யராஜ் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். சசிகுமாரின் மாமாவாக வரும் சமுத்திரகனி காமெடியில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக இவருக்கு பெண் பார்க்க செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது.

    விமர்சனம்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம், தன் படங்கள் பாணியிலேயே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று பல படங்களில் பார்த்த கதையை கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார். தந்தை - மகன் பாச கதையாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இருக்கலாம்.

    அந்தோனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ பழமையானவன்.
    சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பற்றி பேசி இருக்கிறார்.
    விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த விழாவில் விஜய்யின் திரையுலக வளர்ச்சி பற்றி மனம் திறந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

    ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று எட்டு வழிச்சாலை அளவிற்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரின் உண்மையான உழைப்புதான். 

    விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

    திரு.ரஜினிகாந்த் உண்மையான உழைப்புதான் அவர்களை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. திரைத்துறையைப் பொருத்தவரை உண்மையாக உழைத்தால் ஒருநாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
    நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

    நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

    விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.

    மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.

    இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×