search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enemy"

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
    தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், ஆர்யா, விஷால் நடித்த எனிமி படமும் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தனர். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் பிரபலமான ஒரு தியேட்டரில் எனிமி படத்தின் இரண்டாம் பாதியை முதலில் போட்டிருக்கிறார்கள். 

    என்டு கார்டு வந்தபோது தான் அது இரண்டாம் பாதி என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் கத்தி கூச்சலிடவே போலீசாரை வைத்து ரசிகர்களை சமாதானம் படுத்தி இருக்கிறார்கள்.

    விஷால் - ஆர்யா

    அந்த தியேட்டரில் நடந்ததை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டாம் பாதியை முதலில் பார்த்தவர்கள், என்னடா படம் இது என்று அந்த வீடியோவில் சொல்வதை பார்க்க முடிகிறது.

    என்டு கார்டு வரும் வரைக்குமா இது இரண்டாம் பாதி என்று தெரியாமல் பார்த்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்டதற்கு, ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டதால் கடைசியில் தான் பெயர் எல்லாம் வரும் என்று நினைத்துவிட்டோம் என்று படம் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எனிமி’ படத்தின் விமர்சனம்.
    தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.

    திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது.

    விமர்சனம்

    இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் இருவரும் அதகளப்படுத்துகிறார்கள்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் மனதில் நிற்கிறார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.

    விமர்சனம்

    தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘எனிமி’ நல்லவன்.
    தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.

    விஷால்

    இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.
    துரோகிகள் மற்றும் எதிரிகளை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் துரோக சிந்தனையுடன் செயல்பட்டதால் அவரை பதவியில் இருந்து விலக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார் சசிகலா. நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகி இருக்கலாம்.

    22 தொகுதி இடைத் தேர்தலிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்ட அ.தி.மு.க.வினர் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். வருகிற 23-ந் தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்.

    சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று முதலில் கூறிய ஆர்.பி.உதயகுமார் தற்போது சசிகலா சிறையில் உள்ளதால் அவரைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறுகிறார். மந்திரவாதி கே.டி. ராஜேந்திரபாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பார். இவர்கள் எல்லாம் கசாப்புக்கடைக்காரர்கள் போல செயல்படுகின்றனர்.

    ஆர்.கே.நகரில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

    துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? பல அமைச்சர்கள் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களோடு நாம் எப்படி சேர முடியும். துரோகிகளை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய, மக்களாட்சி அமைய அ.ம.மு.க.வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×