என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைகர் நாகேஸ்வர ராவ்"

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து வரும் படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'.
    • இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'. இப்படத்தில் நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது.


    ரவி தேஜா

    'டைகர் நாகேஸ்வர ராவ்' 1970-களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் கதாநாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்.

    இந்நிலையில், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் இணைந்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து வழங்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' எனும் படத்தில் நடித்திருந்தார்.

    அனுபம் கேர் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.

    ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது.
    ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    டைகர்
    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

    ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    ×