என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்து இருக்கிறார்.
பல வெற்றி படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது நடிகராக ‘சாணிக்காகிதம்’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்.சி.எஸ். தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’சாணிக்காகிதம்’ படத்தில் இணைவது பெருமையின் உச்சம் என்றும் ’சாணிக்காகிதம்’ படக்குழுவினர்களுடன் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இதற்கு முன் விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..!
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) November 5, 2021
Happy to work with a talented team of #Saanikaayidham 🎼
Tnkq so much @arunmatheswaran 🤗@Screensceneoffl 💐@sidd_rao@selvaraghavan@KeerthyOfficial@yaminiyag@ramu_thangaraj@Inagseditor@kabilanchelliah@Jagadishblisshttps://t.co/BAl05ZQ6ttpic.twitter.com/YE7rFYWTvH
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் படப்பிடிப்பிற்கு நடுவே மோகன்லால் நடித்த மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் - மோகன்லாலுடன் இருக்கும் புதிய வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
BTS 1 from @MarakkarMovie#Marakkar#MarakkarLionoftheArabianSea@priyadarshandir@antonypbvr@aashirvadcinehttps://t.co/s9L7C2m4lZ
— Mohanlal (@Mohanlal) November 4, 2021
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எனிமி’ படத்தின் விமர்சனம்.
தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.
திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது.

இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் இருவரும் அதகளப்படுத்துகிறார்கள்.

நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் மனதில் நிற்கிறார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.

தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எனிமி’ நல்லவன்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

புனித் ராஜ்குமார் - விஜய் சேதுபதி
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் விமர்சனம்.
யாருக்கும் அஞ்சாமல் அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். இதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது பாசமழை பொழிகிறார்.



உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.

தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் 'அண்ணாத்த' ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற திரிஷா, முதல் தமிழ் நடிகை இந்த சலுகையை பெற்றிருப்பது சந்தோசம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள சிறப்புத் திறமையாளர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
கோல்டன் விசா பெற்ற திரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஷாருக் கான், போனி கபூர், அர்ஜூன் கபூர், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் போன் சினிமா நட்டசத்திரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்விகா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘4 சாரி’ படத்தின் விமர்சனம்.
நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும் டேனியல், அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். இதில் பிக்பாஸ் டேனியல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், காமெடியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். சாக்ஷி அகர்வால் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காளி வெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இதில் காளி வெங்கட், ரித்விகா இருவரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜான் விஜய், சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் பஸ் பயணம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஜான் விஜய்யின் எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
வாழ்க்கையில் தெரியாமல் ஒருவர் செய்த செயல்களால் ஏற்படும் விளைவுகளை இயக்குனர் சக்திவேல் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். நான்கு கதைகள் ஏற்கும் படி இருந்தாலும், அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.
பிரசன்னா சிவராமன் இசையும், வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘4 சாரி’ பாராட்டலாம்.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா, ராமச்சந்திரன், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காபி’ படத்தின் முன்னோட்டம்.
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.
நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றது.






