என் மலர்
சினிமா செய்திகள்
டாக்டர் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் படத்தின் அப்டேட்டை சூரி கொடுத்து இருக்கிறார்.
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்த படம் டான். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சூரி - இயக்குனர் சிபி சக்ரவர்த்தி
இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூரி, தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார், என இயக்குனர் சிபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன், தான் நடிப்பதாக வந்த போஸ்டருக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'காக்க காக்க'. இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். இந்த பெயரில் கவுதம் மேனன் நடிப்பதாக போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. பலரும் கவுதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த போஸ்டரை பார்த்த கவுதம் மேனன், இது என்ன படமென்று எனக்குத் தெரியாது என்று பதிவு செய்து இருக்கிறார். 'அன்புசெல்வன்' படம் தொடர்பாக கவுதம் மேனன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கவுதம் மேனன் பதிவு
"இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது" என்றார்.
ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டு இருந்தார்.

சுந்தர்.சி - ராஷி கண்ணா
இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜீ5 ஓடிடி தளத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆறு மாதகாலமாக பாலகிருஷ்ணாவுக்குத் தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வலி கடுமையானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.
மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறுதி பக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும். ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.

இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும். ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.
அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதி பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம்' இருக்கும்” என்கிறார்
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

தமன்னா, சிரஞ்சீவி
இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘வனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வனம் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி உள்ளதால் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

அண்ணாத்த படக்குழு
இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவையை முல்லைப் பெரியாறு அணை பூர்த்தி செய்கிறது.
குடும்ப உறவுகளை வைத்து வெற்றிப்படங்களை எடுத்துவரும் இயக்குநர்களில் முக்கியமானவர் சீனு ராமசாமி. இவர் எடுத்து முடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல், இடிமுழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் சீனு ராமசாமி பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுவிக்.
இவர் தனது சொந்தப் பணத்தை வைத்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் செயலாளர்களின் உதவியுடன் இந்த அணையைக் கட்டினார் என்பதும் இதனையடுத்து அவருக்கு இன்றும் அந்த பகுதி மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனு ராமசாமி
இந்த நிலையில் பென்னிகுவிக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்க இருப்பதாகப் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில மாதங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார். பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடையை அவர் புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து, இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளார். அதன்படி ‘துப்பறிவாளன் 2’ படத்தை ஜனவரியில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரலில் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.






