என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி பக்கம்"

    இந்தப் படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    `இறுதிப்பக்கம்' மற்றும் 'டியர் ரதி' ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    முந்தைய படம் `இறுதிப்பக்கம்' மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.

    இந்தப் படத்தில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் `குமார சம்பவம்' புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தின் திரைக்கதை, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நகர்கிறது. எதார்த்தமான சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்தப் படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறுதி பக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
    ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

    படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள்  யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும். ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.

    இறுதி பக்கம் படத்தின் போஸ்டர்

    இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும். ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.

    அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதி பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம்' இருக்கும்” என்கிறார்  
    ×