என் மலர்
நீங்கள் தேடியது "Irudhi pakkam"
மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறுதி பக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும். ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.

இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும். ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.
அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதி பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம்' இருக்கும்” என்கிறார்






