என் மலர்
சினிமா செய்திகள்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய், நெல்சன்
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் பீஸ்ட் படம் இருக்காது. இது வேற மாரி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பட ரிலீஸில் சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.

குட்லக் சகி படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘குட்லக் சகி’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகுமார் படங்களுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ திரைப்படம் களமிறங்கி உள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என ரசிகர்கள் பலர் திட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.
சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ஜெய் பீம் படக்குழுவினருடன் கமல்ஹாசன்
அந்தவகையில், ஜெய் பீம் படக்குழுவினரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. அதே சமயம் இப்படம் தியேட்டரில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
25 days of this vera maari BLOCKBUSTER making you laugh, clap & cheer!
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
We're happy to declare that #Doctor has officially grossed 100 Crores in Theatrical 🎊🎉🥳#DOCTORHits100Crs
This victory is yours as much as ours ❤️ pic.twitter.com/kMdCJk97fk
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வாணி போஜன், ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
நடிகைகளில் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பெரிய திரையில் பரபரப்பாக இருப்பவர்களில் முக்கியமானவர் வாணி போஜன். இவர் இளம் கதாநாயகர்களுடன் அதிக படங்களில் ஒப்பந்தமாக்கியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார்.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது, “இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். இந்த தீபாவளியை இது போல் ஆதரவற்றவர்களுடன் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’ஜகமே தந்திரம்’. இப்படத்தில் சிவதாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார். மேலும் இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சிவதாஸ் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் சென்றிருக்கிறார். அப்போது இவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தான் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சூர்யாவிற்கு ‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா, ஞானவேல் மற்றும் குழுவினர்களுக்கு பெரும் நன்றிகள். JaiBhim’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

பா.ரஞ்சித்தின் பதிவு
ஜெய் பீம் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரஜினி, விஜய் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதன் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதேபோல், நடிகர் பிரபுவும், பெங்களூரு சென்று நடிகர் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் நாக சவுரியா. இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடு மஞ்சுரேவுலாவில் உள்ள நாகசவுரியாவின் பண்ணை வீட்டில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 24 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாக சவுரியாவின் நெருங்கிய நண்பர் சுமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.24 லட்சம் ரொக்கம், ஸ்வைப்பிங் மெஷின், சீட்டு கட்டுகள், கார்கள், மொபைல் போன்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பண்ணை வீட்டை நாக சவுரியா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சூதாட்டத்தில் நாக சவுரியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நோ டைம் டூ டை படத்தில் நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் விலகியதை தொடர்ந்து புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் பட உலகில் 1960-களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. ஷான் கானரி, ஜார்ஜ் லேஸன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் உள்ளிட்டோர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். இதுவரை நான்கு தடவை இந்த வேடத்தை ஏற்றுள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார்.
எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்ரிஸ் எல்பா, டாம் ஹார்டி, மைக்கேல் பாஸ்பெண்டர், ரிச்சர்ட் மேடன் டேனியல் கலுயா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஹென்றி கேவிலையும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு பரிசீலிக்கின்றனர்.

ஹென்றி கேவில்
இவர் சில படங்களில் சூப்பர் மேன் வேடத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு ஹென்றி கேவில் பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.






