என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டதாக இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திருப்பாச்சி படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வந்தனர். 

    சமூக வலைதளங்களிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்ணாத்த படத்தை விமர்சிப்பவர்களை இயக்குனர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார்.

    அண்ணாத்த படத்தின் போஸ்டர்
    அண்ணாத்த படத்தின் போஸ்டர்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது. இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.  

    ‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.  

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
    நவரசாவில் இருந்து தன் படம் வெளியேற்றப்பட்டதற்கு மணிரத்னம் சொன்ன காரணம் திருப்திகரமாக இல்லை என இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
    ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் கூட்டுப்படங்கள் தயாரிக்கும் முறை இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமீபகாலத்தில் இப்படியான படங்களின் வருகையை ஓ.டி.டி. தளங்கள் வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம், ஜெயேந்திர இருவரும் இணைந்து நவரசா என்ற பெயரில் ஒன்பது சுவைகளைப் படமாக்கினர்.  

    ஒவ்வொரு இயக்குனரும் ஒரு படத்தை இயக்கியிருந்தனர். அதில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய ஒரு படம் இருந்தது. அதை மணிரத்னம் விலக்கியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. இதை இயக்குனர் பொன்ராம் ரசிகர்களுடன் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

    பொன் ராம்
    பொன்ராம்

    இது பற்றி பொன்ராம் கூறும்போது, “நவரசா ஆந்தாலஜியில் என் படம் வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஒலியில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார். 

    ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை.  எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கதையில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார்.
    விஜய்யை வைத்து சுறா படத்தை எடுத்த இயக்குனர், அடுத்ததாக நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
    இன்றைக்கும் வடிவேலு நகைச்சுவைக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நகைச்சுவை எழுதுபவர்கள்தான். வடிவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளை எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். பொதுவெளியில் இரண்டு நபர்களுக்குள் நடக்கும் விஷயத்தை அப்படியே நகைச்சுவை காட்சியாக எழுதி வெற்றி பெற்றவர். 

    விஜய்யை வைத்து சுறா என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். அந்தப்படத்தில் மருத மலை மாமணியே முருகைய்யா என்ற பாடலை நகைச்சுவையாகக் காட்டி ரசிக்க வைத்திருப்பார். இப்போது எஸ்.பி.ராஜ்குமார் யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். நகைச்சுவை காட்சிகள் வித்தியாசமாக வந்துள்ளதாம். 

    எஸ்.பி.ராஜ்குமார்
    எஸ்.பி.ராஜ்குமார்

    இசையமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சினிமாவில் இருக்கும் வி.ஆர்.ராஜேஷ் படத்தைத் தயாரிக்கிறார். இவர் கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். இப்போதும்  சாலைகளில் வாழ்வோருக்குத் தினமும் மூன்று வேலை இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். சமீபத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய சுமார் 3500 மேடை மெல்லிசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியிருக்கிறார்.
    இசை கச்சேரியில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்ற பிரபல பாடகி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா (வயது 26). இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற இடத்தில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்கு விமானத்தில் பயணம் ஆனார். அந்த விமானத்தில் அவரும், அவருடைய சித்தப்பாவும், தயாரிப்பாளரும், விமான சிப்பந்திகள் 2 பேரும் பயணம் செய்தார்கள்.

    ஆனால் கரட்டிங்கா என்ற அந்த இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ. முன்னதாக அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அனைவரும் கூண்டோடு பலியாகி விட்டனர். மறைந்த பாடகி மரிலியாவுக்கு 2 வயதான லியோ என்ற ஆண் குழந்தை இருக்கிறது. 

    மரிலியா மென்டோன்கா
    மரிலியா மென்டோன்கா

    பாடகி மரிலியா மென்டோன்கா, 2019-ம் ஆண்டின் லத்தீன் கிராமி விருது பெற்றவர் ஆவார். செர்டனேஜோ என்று அழைக்கப்படுகிற பிரேசிலிய நாட்டுப்புற இசையில் மிகப் பெரிய பெயர்களில் ஒன்றாக இவரது பெயர் திகழ்ந்தது. இளம் வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். 

    கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் இவரது கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் ஆன்லைன் இசை கச்சேரிகளில் பங்கேற்றார். அவற்றில் ஒன்று, யூ டியூப்பில் 33 லட்சம் பேரால் உலகம் முழுக்க கண்டுகளிக்கப்பட்டது. இதுதான் உலகளவில் நேரலையில் அதிகம்பேரால் யூடியூப்பில் கண்டு ரசிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்கிறார்கள். பாடகி மரிலியாவின் மறைவு இசைப்பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பார்த்திபன், படக்குழுவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்... நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.

    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு
    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு

    சந்துரு சார்! - இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”. இவ்வாறு இயக்குனர் பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
    தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது. 

    இயக்குனர் சிவா
    இயக்குனர் சிவா

    அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ள இயக்குனர் சிவா, அதன்பின் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நடித்த பத்ரி படத்தில் தான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியதாகவும், அப்போதிலிருந்தே, தனக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருவதாகவும் இயக்குனர் சிவா கூறியுள்ளார். 
    ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    சுருதி
    சுருதி

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக, சுருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் சக்தி கொண்ட காயின் சுருதி வசம் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா, இருளர் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

    இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் படத்தில் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

    ஜெய் பீம்

    இதையடுத்து அந்த காட்சியில் படக்குழு மாற்றம் செய்துள்ளனர். அந்த காலண்டரில் வன்னியர் சங்க குறியீடுக்கு பதிலாக சாமி படம் இருப்பது போல் மாற்றி அமைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஜெய் பீம் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க தயாரானார்.

    இதன்பின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

    கமல்ஹாசன்

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

    விக்ரம்

    நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், தற்போது விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ரிதுன் இயக்கத்தில் மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் முன்னோட்டம்.
    மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு வந்தது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.

    படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ‘’எங்களது படத்திலிருந்து மீனா மினிக்கி.... மற்றும் இறகி இறகி...., கனவுல உசுர..... என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.

    முன்னோட்டம்
    படக்குழுவினர்

    அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்’’.

    நினைவோ ஒரு பறவை படத்தை ரிதுன் இயக்க யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
    ×