என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளை நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேரில் சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    ராகவா லாரன்ஸ்

    இதையறிந்த ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த நிலையில் பார்வதி அம்மாளை நேரில் சென்று ராகவா லாரன்ஸ் பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

    மேலும், எனக்கு அம்மா மற்றும் கடவுள் மீது தான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. சூர்யா அவர்களின் முயற்சியினால் தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.
    முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.வி.பிரகாஷும், நடன இயக்குனர் சாண்டியும் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் - சாண்டி

    அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா, ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

    முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார். 

    ஜெயில்

    இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள். 

    இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

    ரஜினி

    அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்யராஜ், தனது மகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    பாக்யராஜ்

    இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்யராஜ் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ் என்று மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

    பாக்யராஜ்
    ஜெய் பீம் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து சூர்யாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

    இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

    இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

    சூர்யா

    இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல், சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா.ரஞ்சித், ஜடா பட இயக்குனர் குமரன் உள்ளிட்ட பலரும் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் சூர்யாவின் காமன் டிபியை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கிறது.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்.மாணிக்கவேல் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நடனம் அமைப்பதை பிரபுதேவா ஒரு நாளும் நிறுத்தியதே இல்லை. 

    இந்தியில், தெலுங்கு என்று முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைத்துத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். குறிப்பாகத் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு இவர் நடனம் அமைத்தால் அது தனியாகத் தெரியும். ரசிகர்களின் பலத்த வரவேற்பும் கிடைக்கும். 

    விஜய் - பிரபுதேவா

    இந்த மார்க்கெட்டை வைத்து விஜய்யின் அடுத்த படத்திற்கு பிரபுதேவாவை நடனம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய், போக்கிரி மற்றும் வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    `மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. 

    இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
    ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    சபாபதி படத்தின் போஸ்டர்
    சபாபதி படத்தின் போஸ்டர்

    அந்தவகையில், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதமும், 2-ம் பாகம் அடுத்தாண்டும் வெளியாக உள்ளது.

    அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அப்பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். 

    தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

    பூஜா ஹெக்டே

    இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

    அந்த வகையில், நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்தவாரு இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்பட மூவருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

    இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

    இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

    சூர்யா

    இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

    அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×