என் மலர்
சினிமா

சாண்டி- ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.வி.பிரகாஷும், நடன இயக்குனர் சாண்டியும் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா, ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Next Story






