என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வாய்ப்பகுதி சேதம் அடைந்து பற்கள் உடைந்தன.

     

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி


    சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி இன்று (புதன்கிழமை) லங்கா தீவில் இருந்து விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்ப இருக்கிறார். சென்னையில் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    • அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    கள்வன்

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    கள்வன் போஸ்டர்

    அதன்படி, 'கள்வன்' திரைப்படத்தின் டீசர் யூ டியூபில் எட்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய் ஆண்டனி

    இதையடுத்து, மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பிரபல படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவியில் அவருடன் இருக்கின்றனர். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். 


    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • 'வாத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'வாத்தி' படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    வாத்தி

    அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 'சாதி பாக்காத சனமே என் கூட்டு' என்ற வரி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


    இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிகர் சூரி கண்டுகளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகப்புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அன்பிற்கினிய சகோதரர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனும் மற்றும் மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் கண்டுகளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ! வீரம் நிறைந்த மண்" என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    பிக்பாஸ் ஜனனி

    இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
    • இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.


    ஆர்.ஆர்.ஆர்

    சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.


    ஆர்.ஆர்.ஆர்

    மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று வரும் நிலையில் ஆஸ்கார் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்'.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    சாகுந்தலம்

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'மல்லிகா'வருகிற 18-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


    துணிவு

    இந்நிலையில், 'சீமராஜா', 'ரஜினிமுருகன்', 'டி.எஸ்.பி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் 'துணிவு' திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துணிவு செம்ம அஜித்குமார் சார் பெர்பாமென்ஸ் வேற லெவல். எச்.வினோத் ஸ்கேம் கான்செப்ட் சூப்பர். இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள் துணிவு படக்குழு" என பதிவிட்டுள்ளார்.


    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    எஸ்.ஜே.சூர்யா - ராகவா லாரன்ஸ்

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் ஜிகர்தண்டா- 2 படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.


    ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "36 நாட்கள் ஒரே செடியூலில் ஜிகர்தண்டா -2. இந்த வாய்ப்புக்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ் சார். ராகவா லாரன்ஸ் அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வாரிசு போஸ்டர்

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஏகே62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×