என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
    • இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வீர சிம்ஹா ரெட்டி

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வீர சிம்ஹா ரெட்டி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.104 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு
    • விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. சமீபத்தி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    மிஸ் மேகி

    தற்போது இவர் இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.


    மிஸ் மேகி

    இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஸ் மேகி' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
    • இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.


    பீஸ்ட் - அரபிக் குத்து

    இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
    • இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர். படக்குழு

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.


    ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி

    சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'ஆர்.ஆர்.ஆர்'திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமௌலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி

    அதில், "இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார். படம் குறித்து நீங்கள் பத்து நிமிடம் எங்களுடன் பகுப்பாய்வு செய்தது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    ஏகே 62 அப்டேட்

    இந்நிலையில், ஏகே62 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் செல்வராகவன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
    • ’பகாசூரன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    பகாசூரன் போஸ்டர்

    மேலும், 'பகாசூரன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


    துணிவு

    இந்நிலையில், துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் வசூலில் உச்சம் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் 7 கோடி வசூலையும் மலேசியாவில் 8 கோடி வசூலையும் கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் அஹமத் தற்போது இயக்கி வரும் படம் ‘இறைவன்’.
    • இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    இறைவன் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    இறைவன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    'இறைவன்' படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

    'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.


    ஜப்பான் படக்குழு

    'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.


    ஜப்பான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக aநிற்கும் இந்த போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.


    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    நடிகர் சசிகுமார் தற்போது 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    அயோத்தி

    இதைத்தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அயோத்தி

    மதப்பிரச்சினைகளை பேசும் படமாக உருவாகியுள்ளா 'அயோத்தி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயோத்தி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள 'சாதி பாப்பான் மதம் பாப்பான் அத காப்பாத்த சண்டையும் போடுவான்'என்ற வசனம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.




    • தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    டி. ராஜேந்தர்

    இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "குடும்பத்தோட கண்கள்... அதுதானே பெண்கள். ஞாயிறுக்கு அப்புறம் திங்களு...தை பிறந்தால் பொங்கலு. சூரியனுக்கு படைக்கத்தான் சக்கர,சக்கர பொங்கலு. கதிர் தரும் கதிரவன கரும்பா நினைக்கும் பொங்கலு" என  பாடியுள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக சில மாதங்களாக ஓய்வில் இருந்த டி.ராஜேந்திர் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் ஏ.டி.கே. வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

    ×