இந்த வாரம் இவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது. இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6

இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் ஏ.டி.கே. வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com