படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் ஆண்டனி.. உடல்நிலை குறித்து பிரபல தயாரிப்பாளர் பதிவு..

விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனஞ்ஜெயன்
தனஞ்ஜெயன்
Published on

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி

இதையடுத்து, மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பிரபல படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவியில் அவருடன் இருக்கின்றனர். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com