என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    மாமன்னன்

    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு, "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர்.
    • இதில் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.

    பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.



    இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் பூஜை இன்று காலை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றுள்ளது. இதனை இயக்குனர் ஆறுமுக குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 28-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அகநக' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

     

    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கனு நினைச்சிட்டு இருக்கீங்க. சாதி, நமக்கு சாமி மாதிரி போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது.



    இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகக்ளை குவித்து வருகின்றனர்.

    • எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சர்வானந்த்.
    • இவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது. இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.



    இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    • நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    ஏ.ஆர்.ரகுமான் -நித்யா மேனன்

    இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


    லால் சலாம்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.


    ரஜினிகாந்த் -கபில்தேவ்

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், "முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
    • இப்படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கள் ஊறும் பூவே' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "இந்த பாட்டோட கடேசி shot-ல தான் எனக்கு accident ஆச்சு. அந்த song இதோ உங்கள் பார்வைக்கு 'கள் ஊறும் பூவே' பிச்சைக்காரன் 2" என்று பதிவிட்டுள்ளார்.


    'பிச்சைக்காரன் -2' படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
    • ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.


    விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில், "தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.


    கமல்ஹாசன்

    இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி!" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் பா.இரஞ்சித் பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்.
    • இவர் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்கிறார்.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இவர் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சமூக அக்கறைக் கொண்ட பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் மலக்குழி மரணங்கள் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!! மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!" என்று பதிவிட்டுள்ளார்.


    ×