என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.


    என்டிஆர்30

    இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    தேவரா போஸ்டர்

    இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    • இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
    • அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

    இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.


    சல்மான்கான்

    மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது.
    • இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.


    ஐஸ்வர்யா

    இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார். இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார். ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    உயிரிழந்த ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார். இந்த நிலையில் தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூர்யா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ரசிகையின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ஆர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்’.
    • இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்'. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி ஆகியோர் நடித்துள்ளனர்.


    தி லிட்டில் மெர்மெய்ட்

    ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இவள் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஜான்வி கபூர்

    இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தனது இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




    • நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

    நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கானுக்கு கையில் அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார்.


    காயமடைந்த சல்மான்கான்

    இந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் வந்து சல்மான்கானை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்தனர். தோள்பட்டையில் பேண்டேஜ் ஒட்டி தசைநார்ப் பிடிப்பைச் சரி செய்தனர். சல்மான்கான் இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் முதல் பாடலை வடிவேல் பாடியுள்ளார்.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    மாமன்னன் போஸ்டர்

    இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்பாடல் வெளியாகியுள்ளது. வடிவேல் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    இந்த பாடல் "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற வரிகளுடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

    விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
    • இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

    கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


    சாத்வி பிராச்சி

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண் சாமியார் சாத்வி பிராச்சி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஜெய்பூரில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான தியேட்டரில் நின்றபடி பெண் சாமியார் சாத்வி பிராச்சி,மாற்று மதம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இதனை வீடியோவில் பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். அதன்பேரில் ஜெய்பூர் போலீசார், பெண் சாமியார் சாத்வி பிராச்சி மீது சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    டிமான்ட்டி காலனி

    இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் 98 சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியிருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    மாமன்னன்

    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு, "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர்.
    • இதில் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.

    பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.



    இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    ×