படப்பிடிப்பில் காயமடைந்த சல்மான்கான்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
சல்மான்கான்
சல்மான்கான்
Published on: 

நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கானுக்கு கையில் அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார்.

காயமடைந்த சல்மான்கான்

இந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் வந்து சல்மான்கானை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்தனர். தோள்பட்டையில் பேண்டேஜ் ஒட்டி தசைநார்ப் பிடிப்பைச் சரி செய்தனர். சல்மான்கான் இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com