என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது.
    • இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

    சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 6 படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் இளைஞராக நடித்தார். கன்னியாகுமரி என்னும் மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

    தனது 25-வது படமான அபூர்வராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது பெற்றார். மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த நாயகன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த இந்தியன் ஆகிய படங்களுக்கு 2-வது, 3-வது முறையாக இந்திய தேசிய விருது கிடைத்தது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்


    கமல் நடித்த தேவர் மகன் படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் தேசிய விருது பெற்றார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், மகாநதி, அவ்வை சண்முகி, தெனாலி, தசாவதாரம், விக்ரம் என ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழிகளில் 220-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கமல்ஹாசனுக்கு ஏற்கனவே 1979-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது வழங்கியது. 1990-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும், 2014-ம் ஆண்டு பத்மபூஷண் விருதையும் வழங்கியது. 2016-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இந்நிலையில் கமல்ஹாசனின் திரைப்பட சாதனைகளை பாராட்டி அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் நிதேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய படங்களின் சாதனையாளர்கள் என்ற விருது வழங்கப்படுகிறது.

    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டிரைலரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளதாக படக்குழ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஆர்யா நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பட டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.
    • இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்


    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (19) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த போஸ்டரில் விஜய் ஆண்டனியின் படங்களில் இதுதான் அதிக வசூல் பெற்ற படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • நடிகர் அசோக் செல்வன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகர் சாந்தனுவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.


    புளூ ஸ்டார் போஸ்டர்

    தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு புளூ ஸ்டார் (Blue Star) என தலைப்பு வைத்துள்ளது. மேலும், இதனுடன் ஆந்தம் பாடல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோர்ட்டு உத்தரவுப்படி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
    • இப்படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.



    இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


    இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 15 நாட்களில் ரூ.171 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் வெகுவிரைவில் இப்படம் ரூ.200 கோடி வசூலைத் தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12-ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    மாமன்னன்

    இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
    • இப்படத்தில் நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.


    அஸ்வின்ஸ்

    இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    அஸ்வின்ஸ் போஸ்டர்

    இந்நிலையில், 'அஸ்வின்ஸ்' (ASVINS) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையானது.
    • இதற்கு விளக்கமளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ராஷ்மிகா -ஐஸ்வர்யா ராஜேஷ்

    புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.


    ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை

    ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    ராஷ்மிகா

    இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''உங்கள் பேட்டியை நன்றாக புரிந்துகொண்டேன். நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள எந்த தேவையுமில்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. உங்கள் 'ஃபர்ஹானா'வுக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.



    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.


    என்டிஆர்30

    இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    தேவரா போஸ்டர்

    இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    • இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
    • அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

    இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.


    சல்மான்கான்

    மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×