என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்க பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • இப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வெங்கட் பிரபு தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.


    செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு

    செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு

    இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் லியோ படத்திற்கு பிறகு வரும் என்றார்.


    செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு

    செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு

    மேலும் அவரிடம் சில தினங்களுக்கு முன்பு கங்கை அமரன், விஜய்-அஜித் இணைந்து நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். தளபதி 68-ல் அது நடக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அது என் அப்பாவின் ஆசை. இப்பொழுதே படத்தை பற்றி எல்லாம் சொல்லி விட்டால் எப்படி. எல்லாம் சஸ்பென்ஸ்தான். லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? என்று தனக்கே உரித்தான பாணியில் கிண்டல் அடித்தார்.

    • இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு - கமல்

    சிம்பு - கமல்

    இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்

    சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது. பின்னர் முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வைத்தும், துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளை கேப்டன் மில்லர் படக்குழுவினர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.


    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்

    இதனால் ஏராளமான உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறுவதாக குற்றம்சாட்டும் இளைஞர்கள், சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் கொண்டாடும் வேளையில், வன உயிரினங்களை அச்சுறுத்தும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
    • சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.ரஞ்சித்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    விஜய் - மாஸ்டர்

    விஜய் - மாஸ்டர்

    இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக விஜய்-க்கு வழங்கப்படவுள்ளது.


    பா.இரஞ்சித்
    பா.இரஞ்சித்

    தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.இரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.




    மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

    • இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அவருக்கு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சவாமி கோவிலில், இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


    இளையராஜா

    இளையராஜா

    சமீபத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான விடுதலை திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இளையராஜாவின் இசையில் கஸ்டடி, மியூசிக் ஸ்கூல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை. இப்படத்திற்கு இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து மீரா ஜாஸ்மின், அமீஷா படேல், கலாபவன்மணி, கருணாஸ், சரத்பாபு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    விஜய் - யுவன்
    விஜய் - யுவன்

    இப்படத்திற்கு பிறகு விஜய்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் நீண்ட வருட கனவாக இருந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தின் மூலம் 20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளதால் ரசிகர்களின் உற்சாகத்தில் உள்ளனர்.

    • பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா.
    • இவர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பாராநகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா. இவர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பாராநகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சுசந்திர தாஸ்குப்தா மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவரது திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

    துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.


    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன்

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.
    • தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தது. இப்படத்தை முதலில் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவதாகவும், பிறகு அட்லீ இயக்குகிறார் எனவும் பல தகவல் வெளியாகி வந்தது. அதன்பின்னர் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.



    இந்நிலையில் தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிட்டு அறுவித்துள்ளது. அதன்படி தளபதி 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளது. இதற்குமுன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தளபதி 68 படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
    • தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தமிழில் கோபுர வாசலிலே, இருவர், பாப் கான், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்

    குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்

    மோகன்லால் பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • சித்தார்த் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டக்கர்'.
    • 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    டக்கர்

    டக்கர்

    பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டக்கர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது.
    • இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

    சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 6 படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் இளைஞராக நடித்தார். கன்னியாகுமரி என்னும் மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

    தனது 25-வது படமான அபூர்வராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது பெற்றார். மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த நாயகன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த இந்தியன் ஆகிய படங்களுக்கு 2-வது, 3-வது முறையாக இந்திய தேசிய விருது கிடைத்தது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்


    கமல் நடித்த தேவர் மகன் படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் தேசிய விருது பெற்றார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், மகாநதி, அவ்வை சண்முகி, தெனாலி, தசாவதாரம், விக்ரம் என ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழிகளில் 220-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கமல்ஹாசனுக்கு ஏற்கனவே 1979-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது வழங்கியது. 1990-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும், 2014-ம் ஆண்டு பத்மபூஷண் விருதையும் வழங்கியது. 2016-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இந்நிலையில் கமல்ஹாசனின் திரைப்பட சாதனைகளை பாராட்டி அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் நிதேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய படங்களின் சாதனையாளர்கள் என்ற விருது வழங்கப்படுகிறது.

    ×