என் மலர்

  சினிமா செய்திகள்

  அபுதாபியில் சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  X

  கமல்ஹாசன்

  அபுதாபியில் சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது.
  • இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

  சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வருகிற 26, 27-ந் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.


  கமல்ஹாசன்

  கமல்ஹாசன் தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 6 படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் இளைஞராக நடித்தார். கன்னியாகுமரி என்னும் மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

  தனது 25-வது படமான அபூர்வராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது பெற்றார். மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த நாயகன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த இந்தியன் ஆகிய படங்களுக்கு 2-வது, 3-வது முறையாக இந்திய தேசிய விருது கிடைத்தது.


  கமல்ஹாசன்


  கமல் நடித்த தேவர் மகன் படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் தேசிய விருது பெற்றார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், மகாநதி, அவ்வை சண்முகி, தெனாலி, தசாவதாரம், விக்ரம் என ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழிகளில் 220-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  கமல்ஹாசனுக்கு ஏற்கனவே 1979-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது வழங்கியது. 1990-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும், 2014-ம் ஆண்டு பத்மபூஷண் விருதையும் வழங்கியது. 2016-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது.


  கமல்ஹாசன்

  இந்நிலையில் கமல்ஹாசனின் திரைப்பட சாதனைகளை பாராட்டி அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் நிதேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய படங்களின் சாதனையாளர்கள் என்ற விருது வழங்கப்படுகிறது.

  Next Story
  ×