என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு -கமல்

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


    சிம்பு -கமல் -தேசிங்கு பெரியசாமி

    இதற்கு முன்பு கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சரத்பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீராக் காதல்'.
    • இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    தீராக்காதல் போஸ்டர்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரண்யா என்ற கதாபாத்திரத்திலும் ஜெய், கவுதம் என்ற கதாபாத்திரத்திலும் ஷிவதா, வந்தனா என்ற கதாபாத்திரத்திலும் விருத்தி விஷால், ஆர்த்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    தீராக்காதல் போஸ்டர்

    இப்படம் மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • 1977 ஆண்டு பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சரத்பாபு.
    • நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் சரத்பாபு இணைந்து நடித்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்பாபு, ஜூலை 31ம் தேதி, 1951 ஆண்டு பிறந்தார். சத்யம் பாபு தீட்சிதுலு என்ற தனது பெயரை திரையுலகிற்காக சரத்பாபு என்று மாற்றிக் கொண்டார். இவர் 1973 ஆம் ஆண்டு ராமராஜ்யம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.



    அதன்பின்னர் 1977 ஆண்டு தமிழில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முடி சூடா மன்னன், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.



    முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலின் மூலம் சரத்பாபு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை அறியப்பட்டு கொண்டிருக்கிறார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு, நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.



    இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழி படங்களில் நடித்து கவனம் பெற்றார். 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு, கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2023ம் ஆண்டு தமிழில் பாபி சிம்ஹா, காஷ்மிரா பர்தேசி நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார்.



    சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக ஏப்ரல் 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மறைந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் சரத்பாபு நலமுடன் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டது.



    தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி அனைவரையும் கவர்ந்து வந்த சரத்பாபுவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரத்பாபு இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது கலைப்பணியால் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    • நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று காலமானார்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    சரத்பாபு

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    தயாரிப்பாளர் கே பாலாஜி -கமல்ஹாசன் -சரத்பாபு

    இந்நிலையில், சரத்பாபு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என்று வருத்தமாக பதிவிட்டுள்ளார்.


    • விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


    மேலும், 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி யாருமே சொல்லாத cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் வெற்றி பெற்றது என கூறியுள்ளார்.


    இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, Cringe என்று சொல்லி நாம் பல விஷயங்களை மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காக தான் நாம் அனைவரும் ஏங்குகிறோம். அதனை பலரும் Cringe என கூறிவிடுகிறார்கள். யாருமே சொல்லாத Cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது என்று பேசினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டார்.
    • நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

    நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் 68-வது படத்தை இயக்கவுள்ளார்.
    • தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.


    இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நீங்கள் சீரியஸான படம் எடுத்தீர்கள் என்றால் அதை எப்படி தயார்படுத்துவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு வெங்கட் பிரபு, 'நான் சீரியஸாக படம் எடுத்தால் அது ஓடமாட்டேங்குது. நானும் வெற்றிமாறன் போன்று படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை. மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தான் ரசிகர்கள் என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். எண்டர்டெயின்மென்ட் படம் தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும். என்னிடம் இருந்து மக்கள் சீரியஸான படங்களை ஏற்றுக்கொள்ள மட்டார்கள்" என்று பேசினார்.

    • ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
    • இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரஜினி - விக்ரம்
    ரஜினி - விக்ரம்

    இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    ரஜினி
    ரஜினி

    இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் சூரி தற்போது 'கொட்டுக்காளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    'கூழாங்கல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.


    கொட்டுக்காளி படக்குழு

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கொட்டுக்காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படக்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அஜித் பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் இந்த சுற்றுலா நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு

    இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'.

    மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



    இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயனம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும்.

    பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.

    வாழு வாழ விடு

    -அஜித்குமார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டிரைலர் வெளியானது.
    • இந்த டிரைலர் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கழுவேத்தி மூர்க்கன் டிரைலர் யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×