இணையத்தில் கவனம் ஈர்க்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' பட டிரைலர்

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டிரைலர் வெளியானது.இந்த டிரைலர் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கழுவேத்தி மூர்க்கன்
கழுவேத்தி மூர்க்கன்
Published on

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

கழுவேத்தி மூர்க்கன்
கழுவேத்தி மூர்க்கன்

கழுவேத்தி மூர்க்கன்

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

கழுவேத்தி மூர்க்கன்
கழுவேத்தி மூர்க்கன்

கழுவேத்தி மூர்க்கன்

இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கழுவேத்தி மூர்க்கன் டிரைலர் யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com