ஜப்பான் திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு விருது.. உற்சாகத்தில் ரசிகர்கள்

ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.ரஞ்சித்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் - மாஸ்டர்
விஜய் - மாஸ்டர்
Published on

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜய் - மாஸ்டர்
விஜய் - மாஸ்டர்

விஜய் - மாஸ்டர்

இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக விஜய்-க்கு வழங்கப்படவுள்ளது.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.இரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.

மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com