அசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. கவனம் ஈர்க்கும் வீடியோ

நடிகர் அசோக் செல்வன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் சாந்தனுவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
ஷாந்தனு -அசோக் செல்வன்
ஷாந்தனு -அசோக் செல்வன்
Published on

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

புளூ ஸ்டார் போஸ்டர்

தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு புளூ ஸ்டார் (Blue Star) என தலைப்பு வைத்துள்ளது. மேலும், இதனுடன் ஆந்தம் பாடல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com