விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.இப்படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கள் ஊறும் பூவே' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, "இந்த பாட்டோட கடேசி shot-ல தான் எனக்கு accident ஆச்சு. அந்த song இதோ உங்கள் பார்வைக்கு 'கள் ஊறும் பூவே' பிச்சைக்காரன் 2" என்று பதிவிட்டுள்ளார்.

'பிச்சைக்காரன் -2' படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com