என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் விவசாயிகள் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
    இம்ப்ரெஸ் பிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்களுடன் கவிதா இணைந்து தயாரித்துள்ள ஆவணபடம் ‘கொலை விளையும் நிலம்’ க.ராஜீவ் காந்தி இயக்கியுள்ள இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக கூறும் ஆவணபடம் ‘கொலை விளையும் நிலம்’. 50 நிமிடங்கள் ஓடிய இந்த ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது.

    விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசியதாவது:-

    ‘இந்தக் காட்சிகளுக்கு முன்பாக எனக்கு பேச்சே வரவில்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு விவசாய நாடு என்ற அடையாளம் தான் இருக்கிறது. அந்த விவசாயத்துக்கு அடிப்படையே விவசாயிகள் தான். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாவது பெரிய அவலம்.



    இந்த நாட்டில் ஒரு பல்பு தயாரிப்பவனுக்கு கூட தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளால் தங்கள் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. இடைதரகர்கள் தான் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆவணபடத்திற்கு இசை அமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:-

    ‘இது மிக முக்கியமான பதிவு. இதில் என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே இயக்குநர் க.ராஜீவ் காந்திக்கும் கவிதாவுக்கும் பாராட்டுகள். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. வலிமையாகவும் ஆழமாகவும் வரிகளைத் தந்த இயக்குநர் ராஜு முருகனுக்கு நன்றிகள்.



    விஜய் சேதுபதி பேசுகையில்,

    ‘என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே என்னை அழைத்து சென்று உட்கார வைத்தது. அழுதுவிட்டேன். இது யாரால் நடக்கிறது எதனால் நடக்கிறது என்று வெகுநாட்களாகவே பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    ஆனால் நாம் போராடுவதும் போராடும் முறைகளும் எட்ட வேண்டிய காதுகளுக்கு பழகிவிட்டது என்று நினைக்கிறேன். எதோ தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது போல வழக்கமான ஒன்றாகிவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆவணப்படம் இன்னும் சிறிது குறைக்கப்பட்டு பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



    போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மாறவில்லை. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    மரணம் பிறர் வீட்டுக் கதவைத் தட்டும்போது கண்டு கொள்ளாமல் தான் இருப்பார்கள். ஆனால் அது நம் வீட்டுக் கதவை தட்டும் போது தான் அய்யோ அம்மா என்று அடித்துக்கொண்டு அலறுவார்கள். அதுவரை காத்திருக்காமல் இந்த ஆவணப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்’ என்றார்.

    தல அஜித்துக்காக சிறுத்தை சிவா எழுதியுள்ள "தலை விடுதலை" பாடல் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    தல ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்த்த `விவேகம்' படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை விடுதலை' பாடல் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் `விவேகம்' படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.



    இயக்குநர் சிவா எழுதிய  "தலை விடுதலை" பாடல் வலைத்தளத்தில் வெளியானது. இந்த பாடலுடைய வீடியோ வெளியானது. இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் பாடல் வரிகளை எழுதியவர் இயக்குநர் சிவா. இதுவே இவருடைய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    தல அஜித் நடிப்பில் `விவேகம்' படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான தலை விடுதலை சிங்கிள் ட்ராக்கை, இன்று மாலை 3 மணிக்குள் 9.5 லட்சம் பேர் கேட்டுள்ளனர்.

    மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

    பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், நான் அப்பாவி, எந்த குற்றமும் செய்யவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
    கொச்சி ஆனுவா ஜெயிலில் அடைப்பதற்கு கொண்டு செல்லப்படும் முன்பு நடிகர் திலீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாவனா கடத்தல் சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

    நான் அப்பாவி. என்னை சதி செய்து திட்டமிட்டு இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர். நான் குற்றமற்ற வன் என்பதை விரைவில் இந்த உலகுக்கு நிரூபிப்பேன்.

    எனவே நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மன தைரியத்துடன் எதிர்கொள்வேன்.

    இவ்வாறு நடிகர் திலீப் கூறினார்.



    அவர் சிறையில் இருந்து வெளியேறும் முயற்சியை தொடங்கியுள்ளார். இதற்காக நடிகர் திலீப் தரப்பில் நாளை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

    நடிகர் திலீப்புக்கு ஆதர வாக வாதாட பிரபல வக்கீல் ராம்குமார் முன்வந்துள் ளார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 (பி)ன் கீழ் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு ஏற்ப ஆவணங் களை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வக்கீல் ராம்குமார் திட்ட மிட்டுள்ளார்.

    பழிக்குப்பழி - வஞ்சத்துக்கு வஞ்சம் என பாவனா கடத்தல் வழக்கில் சினிமாவையே மிஞ்சம் அளவுக்கு பரபரப்பான திருப்பங்கள் நடந்து வருகிறது.
    சித்திரம் பேசுதடி. இது பாவனா நடித்த முதல் தமிழ் சினிமா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்டார். அவர் ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி' திரைப்படம் புகழை தேடி தந்தது.

    அந்த படத்தில் இடம் பெற்ற ‘‘கண்ணன் வரும் வேளை... அந்தி மாலை நான் காத்திருப் பேன்’’ பாடலை இப்போது கேட்டாலும் பாவனாவின் நடனமும் முக அசைவும் கண் முன் வந்து செல்லும், அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த பாவனா மலையாள திரைப்படங்களிலும் ஹீரோயினாக ஜொலித்துள்ளார்.

    தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி திடீரென காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? கேரளாவில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.



    பாவனாவை மிகவும் நேசித்த ரசிகர்கள் பலர் இந்த சம்பவத்தால் நொறுங்கியே போயிருப்பார்கள். அந்த அளவுக்கு பாவனா கடத்தல் சம்பவம் தமிழ், மலையாள திரைஉலகில் பரபரப்பு தீயைபற்ற வைத்தது.

    பாவனா மீதான மோகத்தால் காமத்தில் மூழ்கிய இளைஞர்கள் சிலரே பாவனாவை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது. இது தொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது பாவனா கடத்தலில் பல்சர் சுனில் என்பவன் மூளையாக செயல்பட்டது அம்பலமானது.

    இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களிலேயே பல்சர் சுனில், வடிவாள் சலீம், பிரதீப், மணிகண்டன், விசிஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரித்த போதுதான் பாவனா கடத்தலில் காதல் மோதலால் ஏற்பட்ட பகை பின்னணியில் இருந்தது தெரியவந்தது.



    மலையாள பட உலகில் மட்டுமின்றி, அம்மாநில அரசியல் களத்திலும் பாவனா விவகாரம் பூதாகர மாகவே வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற போர்க்குரல்களும் ஒலித்தன. இதனையடுத்து அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் சதி திட்டம் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அது போன்று நான் எதுவும் கூறவில்லை என அவர் மறுத்தார்.

    இப்படி பாவனா வழக்கு விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு பாவனா கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கின. அதே நேரத்தில் பாவனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் பரபரப்பான தகவல்கள் பரவின. பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான போது செல்போனில் அந்த காட்சிகளையும் வக்கிர கும்பல் பதிவு செய்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் பேஸ்புக்கில் வெளியாகிவிட்டதாகவும் ஒரு கும்பல் புதிதாக பீதியை கிளப்பியது. ஆனால் போலீஸ் விசாரணையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.



    பாவனா கடத்தல் விவகாரத்தில் திலீப் பெயர் அடிபட தொடங்கியதும் மலையாள திரை உலகின் முன்னணி ஹீரோக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக ‘அம்மா’ என்று அழைக்கக் கூடிய மலையாள நடிகர் சங்க கூட்டமும் கூட்டப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்காமலேயே அந்த கூட்டம் கலைந்தது.

    விசாரணை கோர்ட்டில் நடந்து வருவதால் பாவனா விவகாரத்தில் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு கேரள நடிகைகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாவனாவை அம்மா கைவிட்டு விட்டதாகவே குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையே பாவனா கடத்தல் வழக்கு விசாரணை யில் கொச்சி போலீசார் படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருந்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையிலும், திரை உலகினரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பாவனாவுக்கும், திலீப்புக்கும் பகை இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.



    திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக போலீசார் உறுதியாக நம்பினர். ஆனால் அதனை ஆதாரப்பூர்வ மாகவே அணுக முடிவு செய்தனர்.

    இந்த நிலையில்தான் கடந்த 1-ந்தேதி திலீப்பின் 2-வது மனைவியான காவ்யா மாதவனிடமிருந்து பாவனா பாலியல் தொடர்பான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு சிக்கியது. இதனையே முக்கிய ஆதாரமாக வைத்து திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நட்சத்திர தம்பதிகள் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களோடு சேர்ந்து பாவனா, காவ்யா மாதவன் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டனர்.

    அப்போது பாவனாவும் திலீப்பும் சேர்ந்து சில சொத்துக்களை வாங்கியிருப்பது தெரிந்தது. இப்படி ஒன்றாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட போதுதான் திலீப் - மஞ்சுவாரியார் வாழ்க்கையில் காவ்யா மாதவன் வடிவில் விரிசல் ஏற்பட்டது. திலீப்பும், காவ்யா மாதவ னும் பழக தொடங்கினர். இதனை மஞ்சுவாரியாரிடம் பாவனா போட்டுக் கொடுத் துள்ளார்.



    மஞ்சுவாரியார் - திலீப் தம்பதிகளின் பிரிவுக்கு மூலக்காரணமாக இதுவே அமைந்தது என்கிறது மலையாள படஉலகம். இதன் பின்னர் மஞ்சுவாரியாரை பிரிந்த திலீப், காவ்யா மாத வனை மணந்து கொண்டது தனிக்கதை.

    இப்படி தனது குடும்பத் தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பாவனாவே இடையில் புகுந்து பாலம் கட்டியதாக திலீப் கருதினார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவும், வஞ்சம் தீர்க்கவும் பாவனா மீது திலீப் ஆட்களை ஏவி விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இப்படி சினிமா காட்சி களை மிஞ்சும் வகையில் பரபரப்பான திருப்பங்களு டன் 4½ மாதங்களாக சென்று கொண்டிருக்கிறது. பாவனா கடத்தல் வழக்கு தலைமறைவாக இருக்கும் காவ்யா மாதவனை கைது செய்வதுடன் முடிவுக்கு வருமா? இல்லை இரண்டாம் பாகமாக பாவனா கடத்தல் வழக்கு விரியுமா? என்பதே இப்போதைய கேள்வி.

    விஜயகாந்தின் தம்பியாக ராஜ்ஜியம் படத்தில் ஊமை யாக நடித்துள்ள திலீப்பா இப்படி? நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள் அவரது ரசிகர்கள்.
    பாலகிருஷ்ணா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை
    ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

    இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.

    வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.

    இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலகிருஷ்னா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. மற்றும் விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சி.கல்யான், காட்ரகட்ட பிரசாத், படத்தின் இயக்குனர் கிரிஷ், படத்தின் தயாரிப்பாளர் ரகுநாத்,நரேந்திரா, y.ராஜீவ் ரெட்டி, ஜகர்ல முடி சாய்பாபு, பிபோ ஸ்ரீநிவாஸ், மற்றும் கிருஷ்ணாரெட்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும் போது...

    நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி நானும் உங்களில் ஒருத்தன் தான் சென்னையில் பிறந்தவன் சென்னையில் வளர்ந்தவன் தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு  நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே டைரக்டர் கிருஷ் இந்த கதையை சொன்னார் உடனே ஒகே சொன்னேன். இது நம்மளை ஆண்ட ஒரு நம் மன்னனின் கதை. இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்க இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது..இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும் தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது. அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம்.. அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன்..சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது..நானும் உங்களில் ஒருத்தன் தான்.. இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணா தமிழில் பேசினார்.

     மற்றும் கே.எஸ். ரவிகுமார் நடிகர் கார்த்தி, இயக்குனர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி மற்றும் சி.கல்யாண் காட் ரகட்டா பிரசாத் உட்பட பலர் பேசினார்கள்..

    இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார்.
     
    நடிகை எமி ஜாக்சன் தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரலாகியது
    நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் திரை பயணத்தைத் தொடங்கியவர். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை.

    இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் பெரிதாக வெற்றிக்கொடுக்கவில்லை.

    தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். கவர்ச்சி படங்களை வெளியிட கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை. இவர் டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார்.

    தற்போது புதிதாக அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது
    `பாகுபலி' முதல் பாகம் நேற்றோடு 2-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நன்றி கடிதம் ஒன்றை வெளியட்டிருக்கிறார்.
    இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி' என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக `பாகுபலி' உருவெடுத்துள்ளது. `பாகுபலி' படத்தின் இரண்டாவது பாகம் உலகளவில் ரூ.1700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது.

    இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ஆம் ஆண்டு  ஜுலை 10-ஆம் தேதி வெளியானது. நேற்றோடு `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். `பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் இவர்கள் பிரபலமாகிவிட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. அதிலும் பிரபாஸ், இந்திய பிரபலங்கள் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.



    இதையடுத்து `பாகுபலி' படத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். `பாகுபலி'  குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும், மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள்  என்னை சிலிர்ப்போடு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கும், `பாகுபலி'  குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு கூறியிருக்கிறார்.
    கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற தலைப்பில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையொட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில், ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
    எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அதர்வா
    எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் அதர்வா சமார்த்தியகாரர் என்று திரை உலகினர் பாராட்டி வருவதுண்டு.

    ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல் வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும் `இமைக்கா நொடிகள்' படம் மூலம் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோ உருஎடுப்பார் என பெரிதும் நம்புகிறது திரை உலகம்.

    கேமியோ பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் சி.ஜெயக்குமார் தயாரிக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் டிமோண்ட்டி காலனி, திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா. பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிகமுக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் `இமைக்கா நொடிகள்' படம்  திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



    சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக்பட்ட இந்த படத்தின் சண்டைக் காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.  ஹாங்காங் - ஐ சேர்ந்த லீஹானீயூ என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து  பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.

    "இயக்குனர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும்படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹாலீவுட் ஸ்டண்ட் இயக்குநர்  ஒருவரை கொண்டு வந்து உள்ளேன். படம் எங்கும் பரவி நிற்கும் இத்தகைய பிரம்மாண்டம் ரசிகர்களை இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் என்றார் தயாரிப்பாளர் சி ஜெயக்குமார்.
    ‘காலா’ படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். டைரக்டர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் 28-ந்தேதி மும்பையில் தொடங்கியது.

    இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் மே 27-ந்தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஜூன் 8-ந்தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.



    ‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ந்தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.

    சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களின் கேள்விக்கு பதில் எதுவும் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.
    ‘ஆடவர்’ படத்திற்காக தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் பாடிய பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி மட்டும் இன்றி, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
    ஆண்கள் மட்டுமே நடித்துள்ள முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள ‘ஆடவர்’ படத்திற்காக தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் பாடிய பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி மட்டும் இன்றி, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

    தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரித்திருக்கும் படம் ‘ஆடவர்’. 75 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில், கேரள அரசின் விருது பெற்ற தஷி இசையமைப்பில், சொ.சிவகுமார் பிள்ளை, கலைவேந்தன் ஆகியோரது வரிகளில் உருவான இப்பாடல்களை கானா உலகநாதன், டியாலோ கோபி ஆகியோர் பாடியுள்ளனர்.

    கானா உலகநாதன் பாடியுள்ள “அழகா தெரியுது சென்னை மச்சான்...” என்ற பாடல் தமிழகம் மட்டும்  இன்றி, ஆஸ்திரேலியா, கனடா என்று உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமடைந்து வருகிறது. டியாலோ கோபு பாடியுள்ள மதுவுக்கு எதிரான பாடல், ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதுடன், சிந்தக்க செய்துள்ளது.

    படம் வெளியாவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள ‘ஆடவர்’ பட பாடல்களை, இசையமைப்பாளர் பரத்வாஜ், பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குநர் பேரரசு, சண்டைப்பயிற்சி இயக்குநரும் கில்டு செயலாளருமான ஜாக்குவார் தங்கம், சீரடியில் உள்ள நீலகண்ட சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர்.

    புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஆடவர்’ படத்தில் கிரண் என்ற 10 வயது சிறுவன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ் அடியான் என்ற நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சஸ்பென்ஸ் திரில்லரோடு சமூகத்திற்கு பயன் தரும் விஷயத்தை சொல்லியிருக்கும் ‘ஆடவர்’ விரைவில் வெளியாக உள்ளது.
    காலா படத்தில் நடித்தது தனது வாழ்நாள் சாதனையாக பெருமைபடுவதாக தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி
    கபாலி படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து பா ரஞ்சித் இயக்கி வரும் படம் காலா. இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் வரும் 12-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

    இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுகையில் தான் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன் என்றும், ரஜினி படம் ரிலீஸ் ஆகும் பொழுது அடித்து பிடித்து முதல் காட்சி பார்த்தவன் என்றும் கூறினார். தான் காலா படத்தில் நடித்தது தனது வாழ்நாள் சாதனையாக பெருமைபடுவதாக தெரிவித்துள்ளார்
    ×