search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழிக்குப்பழி"

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    ரவுடியை கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டிய வழக்கில் போலீசார் ஐந்து பேரை வலைவீசி தேடிவருகின்றனர். #Murder
    ஸ்ரீபெரும்புதூர், நவ. 11-

    குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). நேற்று மாலை அவர் எருமையூரில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பலியானார்.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் பழந்தண்டலம் பகுதியை சேர்ந்த ரவுடி நவரசன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜய் கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜய் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவரை மர்ம கும்பல் தீர்த்துக்கட்டி விட்டனர்.

    எனவே ரவுடி நவரசன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக எருமையூர், பம்மல் பகுதியை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினாலதான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
    ×