என் மலர்
இது புதுசு
யமஹா நிறுவனத்தின் E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு சர்வதேச சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து, யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது டெஸ்டிங் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மலேசியா, தாய்லாந்து, தாய்வான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த ஸ்கூட்டர் ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் டெஸ்டிங் செய்யப்படும் என ப்ரூஃப் ஆப் கான்செப்ட் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள யசுஷி நொமுரா தெரிவித்து இருக்கிறார். ஐரோப்பிய நெடுஞ்சாலைகளில் யமஹா E01 டெஸ்டிங் செய்யப்பட்டு, வானிலை சூழ்நிலைகளில் ஸ்கூட்டர் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்ள யமஹா ஜப்பான் முடிவு செய்து இருக்கிறது.

இதே போன்று மலேசிய டெஸ்டிங்கில் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெப்ப மண்டலங்களில் சோதனை செய்யப்பட இருக்கிறது. ரேன்ஜ், சார்ஜிங் வழிமுறைகள் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்ட விவரங்கள் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்டிங்கின் போது கணக்கிடப்பட இருக்கிறது.
யமஹா என் மேக்ஸ் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் வெர்ஷனாக புதிய யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். இதில் 4.9 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இதன் விலை பற்றி இதுவரை எந்த தகவலையும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு யூனிட்டின் விலையும் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் போது, தேர்வு செய்யும் ஆப்ஷ்களுக்கு ஏற்ப அவர்களிடமே தெரிவிக்கப்படும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ஸ்டாண்டர்டு மாடலை விட புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் ஓட்டுவோருக்கு முற்றிலும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் உள்ள டார்க் காஸ்மெடிக் அம்சங்கள் இளையோருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. பிளாக் பேட்ஜ் மாடலில் ஏராளமான டார்கென்டு ஸ்டைலிங் செய்யப்பட்டு இருக்கிறது.

பிளாக் பேட்ஜ் மாடலில் பி-ஸ்போக் 21 இன்ச் கார்பன் பைபர் கம்போசிட் வீல்கள், ஃபுளோட்டிங் ஹப் கேப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இந்த காரின் வெளிப்புற நிறத்தை வாடிக்கையாளர்கள் 44 ஆயிரம் நிற ஆப்ஷ்களில் இருந்து தேர்வு செய்து கொள்ள முடியும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலின் வெளிப்புறம் பிளாக் நிறத்திலும், உள்புறம் மண்டரின் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் 6.75 லிட்டர், டுவின் டர்போ V12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 592 ஹெச்.பி. திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது கோஸ்ட் ஸ்டாண்டர்டு மாடலை விட 29 ஹெச்.பி. மற்றும் 50 நியீட்டன் மீட்டர்கள் அதிகம் ஆகும். இத்துடன் 4 வீல் ஸ்டீரிங், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 XL6 பேஸ்லிப்ட் மாடல் ஏராளமான புது அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2022 மாருசி சுசுகி XL6 பேஸ்லிப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2022 மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் அதிகளவு காஸ்மெடிக் மாற்றங்கள், உள்புறம் மற்றும் என்ஜின் என அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 2022 மாருதி சுசுகி XL6 காரில் உள்ள என்ஜினுடன் புது கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலில் 4 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2022 XL6 பேஸ்லிப்ட் கார் புதிய 1.5 லிட்டர் K15C சீரிஸ், டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்திறது.
இத்துடன் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. 2022 மாருதி சுசுகி XL6 மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.97 கிலோமீட்டர் மைலேஜ், ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 20.27 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
லெக்சஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் RZ 450e எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய RZ மாடல் டொயோட்டா bZ4X எஸ்.யு.வி. மாடலை போன்றே TNGA பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
லெக்சஸ் RZ 450e காரின் ஒட்டுமொத்த தோற்றம் அந்த நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் லெக்சஸ் டிசைன் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு லெக்சஸ் இந்த மாடல் விவரங்களை முண்ணோட்டமாக வெளியிட்டு இருந்தது. இந்த காரின் முன்புறம் லெக்சஸ் நிறுவனத்தின் டிரேட்மாக் ஸ்பிண்டில் கிரில் உள்ளது. இது எலெக்ட்ரிக் காரின் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் சீறிப்பாயும் அக்செல்லரேஷனை குறிக்கும் வகையில் காட்சியளிக்கிறது.

தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலில் லெக்சஸ் நிறுவனம் 71.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை வழங்கி இருக்கிறது. இதே பேட்டரி தான் டொயோட்டா bZ4X மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 362 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். காம்பேக்ட் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இந்த காரில் புதிதாக டைரக்ட் 4 வீல் டிரைவ் பவர்-டிரைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு மோட்டார் காரின் முன்புறத்திற்கு 203 ஹெச்.பி. திறன், பின்புறத்திற்கு 108 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இவை இணைந்து 312 ஹெச்.பி. பவர், 435 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 159 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை 7 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முற்றிலும் புதிய ஏழாம் தலைமுறை 7 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் லக்சரி சலூன் மாடல் ஆகும். 2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-எலெக்ட்ரிக் i7 செடான் மாடலும் இந்த சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
45 வருட பி.எம்.டபிள்யூ. வரலாற்றில் டாப் எண்ட் பிரிவில் எலெக்ட்ரிக் மாடல் நிலை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய i7 மாடல் 7 சீரிஸ் ஐ.சி.இ. என்ஜின் வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. iX மற்றும் i4 மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த பிரிவில் புதிய பி.எம்.டபிள்யூ. i7 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQS காருக்கு போட்டியாக அமைகிறது.
2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் கேபினில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் லைவ் காக்பிட் பிளஸ், முற்றிலும் புதிய ஐடிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு உள்ளது. இதன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த மாடலின் பின்புற இருக்கைகள் அதிக சவுகரியத்தை வழங்கும் படி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 31.3 இன்ச் 8K தியேட்டர் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவினை காரினுள் பொருத்திக் கொள்ளும் வசதி இந்த மாடலில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கார் தியேட்டர் அனுபவத்தை பெற முடியும். இதன் டோர் பேனல்களில் இரண்டு 5.5 இன்ச் அளவிலான டேபில்கள் உள்ளன.
முற்றிலும் புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல் பெட்ரோல், டீசல், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடலான 740i 3 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 375 ஹெச்.பி. பவர், 519 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டாப் எண்ட் மாடலான 760i எக்ஸ்-டிரைவ், 4.4 லிட்டர் டுவின்-டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 536 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. i7 எக்ஸ்-டிரைவ் 60 மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 536 ஹெச்.பி. பவர், 744 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனம் புத்தம் புது ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ஜீப் காம்பஸ் 2020 பிரீ-பேஸ்லிப்ட் மாடலின் நைட் ஈகிள் எடிஷன் மாடலை ஜீப் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனில் கிளாஸ் பிளாக் கிரில், மற்றும் கிரில் ரிங்குகள், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள், ஃபாக் லேம்ப் பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் பியானோ பிளாக் டிரீட்மெண்ட் செய்யப்பட்டு பிளாக் வினைல் சீட்கள், டங்ஸ்டன் ஸ்டிட்ச், பிளாக் வினைல் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆல் ஸ்பீடு டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், எலெக்டிரானிக் பார்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது.
ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2 லிட்டர், 4 சிலிண்டர் மல்டிஜெட் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.4 லிட்டர் மல்டி-லேயர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் முறையே 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிஸ்கவரி ஸ்பெஷல் எடிஷன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிஸ்கவரி மெட்ரோபொலிடன் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் விலை ரூ. 1 கோடியே 26 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுகம் செய்ததோடு, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபொலிடன் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபொலிடன் எடிஷன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆர்-டைனமிக் HSE மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரைட் அட்லஸ் டீடெயிலிங் மற்றும் டிஸ்கவரி பேட்ஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹகுபா சில்வர் லோயர் பம்ப்பர் இன்சர்ட்கள், 20 இன்ச் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட டார்க் கிரே அலாய் வீல்கள், பிளாக் லேண்ட் ரோவர் பிரேக் கேலிப்பர்கள், ஸ்லைடிங் முன்புற சன்ரூஃப் மற்றும் பின்புறம் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 12.3 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், போன் சிக்னல் பூஸ்டர், முன்புறம் கூலர் கம்பார்ட்மெண்ட், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீடெட் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. கேபின் முழுக்க டைட்டானியம் மெஷ் ட்ரிம் டீடெயிலிங் செய்யப்பட்டு உள்ளது.
புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி மெட்ரோபொலிடன் எடிஷன் மாடலில் 3 லிட்டர் D300 இன்ஜெனியம் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 296 பி.ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் P360 3 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 355 பி.ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம், மேம்பட்ட அக்செல்லரேஷன் மற்றும் செயல்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் விரைவில் 2022 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் அப்டேட் செய்ய இருக்கிறது. மிக விரைவில் 2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய A8 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை ஆடி இந்தியா வெளியிட்டு உஎள்ளது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய 2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S கிளாஸ் மற்றும் பி.எம்.டபிள்.யூ. நிறுவனத்தின் 7 சீரிஸ் கார் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே புதிய A8 பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து விட்டது. சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட ஸ்டைலிங், அதிகளவில் புது அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆடி A8 மாடலில் பெரிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள புதிய வீல்கள் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
நிறங்களை பொருத்தவரை 2022 ஆடி A8 மாடல் மெட்டாலிக் டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் ஃபிர்மனெண்ட் புளூ, மேன்ஹேட்டன் கிரே மற்றும் அல்ட்ரா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் டேடோனா கிரே, ஃபுளோரெட் சில்வர், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் கிளேசியர் வைட் போன்ற நிறங்கள் மேட் ஃபினிஷிங்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஷாட்கன் 650 ப்ரோடக்ஷன் ரெடி மாடலின் டெஸ்டிங்கை தொடங்கி இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புகைப்படங்களின் படி புதிய ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடல் ப்ரோடக்ஷன் ரெடி மாடல் வெளிநாடுகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. பொதுவெளி சாலைகளில் புது ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. தற்போதைய புகைப்படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷாட்கன் 650 மாடல் பற்றிய புது விவரங்கள் வெளியாகி உள்ளது.

Photo Credit: Motorcyclenews.com
முந்தைய ப்ரோடோடைப் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஷாட்கன் 650 மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற ஹெட்லேம்ப் கவுல் புகைப்படங்களில் இருப்பதை போன்றே இறுதி வடிவிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் வழக்கமான பல்பு இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு மாடல்களில் இவ்வாறு வழங்கப்படுவது புது மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாடலில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் காண்டினெண்டல் ஜி.டி. 650 மற்றும் இண்டர்செப்டார் 650 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 650சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் இந்த என்ஜின் வேறு விதமாக டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
யமஹா நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர் மாடல் பசினோ விரைவில் புது அப்டேட் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் சமீப காலங்களில் பல்வேறு புது மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது யமஹா பசினோ 125 மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் யமஹா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் யமஹா பசினோ 125 மாடல் புதிதாக சில்வர் கிரே என டூயல் டோன் நிறம் கொண்ட வேரியண்ட் காட்சிப்படுத்தப்பட்டது. இதே நிகழ்வில் யமஹா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் காட்சிக்கு வைத்து இருந்தது. யமஹா டீலர்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிகழ்வில் யமஹா நிறுவனம் தனது நியோஸ் மற்றும் இ01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தியது.

புதிய நிற வேரியண்ட் யமஹா பசினோ 125 மற்ற நிற வேரியண்ட்களுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. புது நிறம் சேர்க்கும் பட்சத்தில் யமஹா பசினோ 125 மாடல் மொத்தம் ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும். யமஹா பசினோ 125 சில்வர் கிரே நிறங்கள் அடங்கிய டூயல் டோன் வேரியண்ட் விலையை இதுவரை அறிவிக்கவில்லை.
எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா பசினோ 125 புது நிறம் கொண்ட மாடல் விலை ரூ. 83 ஆயிரத்து 130, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. யமஹா பசினோ 125 மற்ற டூயல் டோன் ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டர்களும் இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய நிறம் கொண்ட வேரியண்டும் இதே விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 200 டியூக் மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் மிகவும் பிரபல மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் கே.டி.எம். 200 டியூக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கே.டி.எம். 200 டியூக் மாடல் வெள்ளை நிற பெயிண்டிங், பியூவல் டேன்க் மீது கருப்பு நிற ரேசிங் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பெயிண்டிங் உடன் வீல்களில் கே.டி.எம். நிறுவனத்தின் பாரம்பிரயம் மிக்க ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிள் மாடலை முழுமையான ஆரஞ்சு மற்றும் பிளாக் நிற கிராஃபிக்ஸ் உடனும் பெற்றுக் கொள்ள முடியும். 2020 ஆண்டு வாக்கில் கே.டி.எம். நிறுவனம் தனது கே.டி.எம். 200 டியூக் மாடலின் ஸ்டைலிங்கை மாற்றியது.
இதில் 250 டியூக் மாடலில் உள்ளதை போன்ற ஆங்குலர் ஹெட்லேம்ப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிளில் 199சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்கள் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இரு நிறுவனங்களின் மிகப்பெரும் வெளியீடுகளாக ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்கள் இருக்கின்றன.
இவற்றில் ஸ்லேவியா மாடல் ஸ்கோடாவின் பிரபல ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோன்று விர்டுஸ் மாடல் வோக்ஸ்வேகன் வென்டோ மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் உற்பத்தி பணிகள் சக்கன் ஆலையில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்லேவியா மாடல்- ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் டைல் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன.
புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் மார்ச் மாத துவக்கத்தில் சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. இதில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.






