search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ்
    X
    2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ்

    அசத்தலான அப்டேட்களுடன் முற்றிலும் புதிய 7 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை 7 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முற்றிலும் புதிய ஏழாம் தலைமுறை 7 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் லக்சரி சலூன் மாடல் ஆகும். 2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-எலெக்ட்ரிக் i7 செடான் மாடலும் இந்த சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    45 வருட பி.எம்.டபிள்யூ. வரலாற்றில் டாப் எண்ட் பிரிவில் எலெக்ட்ரிக் மாடல் நிலை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய i7 மாடல் 7 சீரிஸ் ஐ.சி.இ. என்ஜின் வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. iX மற்றும் i4 மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த பிரிவில் புதிய பி.எம்.டபிள்யூ. i7 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQS காருக்கு போட்டியாக அமைகிறது.

    2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் கேபினில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் லைவ் காக்பிட் பிளஸ், முற்றிலும் புதிய ஐடிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு உள்ளது. இதன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த மாடலின் பின்புற இருக்கைகள் அதிக சவுகரியத்தை வழங்கும் படி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ்

    இத்துடன் 31.3 இன்ச் 8K தியேட்டர் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவினை காரினுள் பொருத்திக் கொள்ளும் வசதி இந்த மாடலில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கார் தியேட்டர் அனுபவத்தை பெற முடியும். இதன் டோர் பேனல்களில் இரண்டு 5.5 இன்ச் அளவிலான டேபில்கள் உள்ளன. 

    முற்றிலும் புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல் பெட்ரோல், டீசல், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடலான 740i 3 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 375 ஹெச்.பி. பவர், 519 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     2023 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ்

    டாப் எண்ட் மாடலான 760i எக்ஸ்-டிரைவ், 4.4 லிட்டர் டுவின்-டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 536 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. i7 எக்ஸ்-டிரைவ் 60 மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 536 ஹெச்.பி. பவர், 744 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். 

    Next Story
    ×