என் மலர்tooltip icon

    இது புதுசு

    மஹிந்திரா நிறுவனம் தனது புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான டீசரை மஹிந்திரா நிறுவனம் அதிரடியாக வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்கார்பியோ மாடல் மும்பையில் உள்ள மஹிந்திரா இந்தியா டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டு சென்னை அருகில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன், பிரீமியம் இண்டீரியர், அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய ஸ்கார்பியோ மாடல் ஹூண்டாய் கிரெட்டா, எம்.ஜி. ஹெக்டார், நிசான் கிக்ஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    டீசரில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் எல்.இ.டி. டுவின் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி.  ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இவை முறையே 150 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இத்துடன் இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் யாரும் எதிர்பாராத நிலையில், புதிய டாடா ஏஸ் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா ஏஸ் மாடலை அதிரடியாக அப்டேட் செய்து இருக்கிறது. இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிறிய ரக வர்த்தக வாகனமாக விற்பனை செய்யப்படும் டாடா ஏஸ் மாடல் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

    இதுவரை டாடா ஏஸ் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்று வித வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டாடா ஏஸ் தற்போது அனைத்து விதமான எரிபொருள்களிலும் இயங்கும் மாடல் என்ற பெருமையை இருக்கிறது. 

    டாடா ஏஸ் EV

    இந்தியாவில் தற்போதைய டாடா ஏஸ் மாடல்களின் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதிய டாடா ஏஸ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

    டாடா ஏஸ் EV மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் EVOGEN பவர்டிரெயினில் இயங்குகிறது. இந்த பவர்டிரெயினில் கிடைக்கும் முதல் வாகனம் இது ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதில் 21.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 36 ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டாடா ஏஸ் EV மாடலில் பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வாகனத்தின் டிரைவிங் ரேன்ஜ்-ஐ அதிகப்படுத்தும்.  
    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    தென் கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது ஆல் எலெக்ட்ரிக்  EV6 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய  EV6 மாடலுக்கான டீசகர் கியா இந்தியா அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. 

    அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து விட்டது.

     கியா EV6

    இந்த நிலையில், புதிய கியா  EV6 மாடலுக்கான முன்பதிவுகள் மே 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா  EV6 மாடல் 58kWh மற்றும் 77.4kWh என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் வெவ்வேறு வெர்ஷன்கள் அதற்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ்களை வழங்குகிறது.

    உதாரணத்திற்கு கியா EV6 77.4kWh பேட்டரி மற்றும் RWD செட்டப் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 528 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள 800 வோல்ட் சார்ஜிங் சப்போர்ட் காரணமாக கார் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக 18 நிமிடங்களே ஆகிறது. 

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா நைட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாற்றங்களை பொருத்தவரை கிரெட்டா நைட் எடிஷனின் வெளிப்புறம் டி-குரோம் செய்யப்பட்ட முன்புற கிரில், முன்புறம் - பின்புறம் ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள், சி பில்லர் மற்றும் ORVM-களில் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதன் பின்புற டெயில் கேட் பகுதியில் நைட் எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன்

    வீல்களை பொருத்தவரை புதிய பேஸ் மாடலான கிரெட்டா S+ வேரியண்ட்-இல் 16 இன்ச் டார்க் கிரே நிற அலாய் வீல்களும், டாப் எண்ட் SX (O) வேரியண்டில் 17 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுஉள்ளன. இதன் முன்புற டிஸ்க் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டுள்ளன. கேபின் முழுக்க ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு, லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் SX (O) வேரியண்டில் மட்டும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலையை அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலையை அறிவித்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. இது ஹோண்டா சிட்டி ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 4.5 லட்சம் அதிகம் ஆகும். 

    ஹோண்டா சென்சிங் அல்லது ADAS அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் முதல் கார் மாடல் இது ஆகும். ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுவன உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று முதல் இந்த காரின் வினியோகம் துவங்குகிறது. 

     ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட்

    ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய X1 மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் ஒன்றாக புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. X1 இருக்கிறது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. டீலர் புதிய X1 மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்.

    டீசரில் புதிய தலைமுறை எஸ்.யு.வி. மாடலின் சில்-ஹவுட் படம் இடம்பெற்று உள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் iX1 என பெயரிடப்பட்டு உள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என்பதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. எனினும், புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. X1 மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை எஸ்.யு.வி. மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    அதன்படி புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடலில் 305 ஹெச்.பி. திறன் வழங்கும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய X1 மாடலின் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் அளவில் மற்ற பி.எம்.டபிள்யூ. எஸ்.யு.வி.-க்களை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் CNG வேரியண்ட் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் CNG வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக கியா கரென்ஸ் CNG மாடல் ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து இம்முறை அல்கசார் CNG மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

    கியா கரென்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த 7 சீட்டர் கார் ஆகும். தற்போது நிறுவனங்களும் தங்களின் 7 சீட்டர் மாடலில் CNG கிட் வழங்க முடிவு செய்துள்ளன. ஸ்பை படங்களின் படி ஹூண்டாய் அல்கசார் CNG மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் இன்றி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

     ஹூண்டாய் அல்கசார் CNG
    Photo Courtesy: MotorBeam

    7 சீட்டர் மாடல் என்பதால் ஹூண்டாய் அல்கசார் பிரீமியம் தோற்றம் மற்றும் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த மாடலின் முன்புற கிரில் மற்றும் உயரமான ரூஃப்லைன் உள்ளிட்டவை காருக்கு அசத்தலான தோற்றத்தை வழங்குகின்றன. 

    ஹூண்டாய் அல்கசார் மாடல் இந்திய சந்தையில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இதன் CNG கிட் ஒற்றை என்ஜினில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மாடலின் புது வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய குஷக் ஆம்பிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் பேஸ் ஆக்டிவ் வேரியண்ட் மற்றும் ஆம்பிஷன் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

    ஆம்பிஷன் கிளாசிக் MT விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயரம் என விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்பிஷன் கிளாசிக் 1.0 AT மாடல் விலை ரூ. 14 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய குஷக் ஆம்பிஷன் மாடலில் பின்புற வைப்பர் மற்றும் டி-ஃபாகர், முன்புற பம்ப்பர் ஏர் இன் டேக், சில்வர் முன்புற மற்றும் பின்புற டிப்யூசர்களில் குரோம் ஹைலைட்கள் உள்ளன. இத்துடன் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ORVM-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, எல்.இ.டி. ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் மற்றும் முன்புற ஃபாக் லைட்கள் உள்ளன.

    இந்த காரின் கேபினில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெதர் கொண்டு ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ரியர் பார்க்கிங் கேமரா, கூல்டு கிளவ் பாக்ஸ், பின்புறம் பார்சல் டிரே, பேடில் ஷிப்டர்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது.

    புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர், TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்கோடா நிறுவனம் மே 9 ஆம் தேதி புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை இந்தியா ஆர்ட் ஃபேர் நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் புதிய i4 எலெக்ட்ரிக் மாடல் மே 26 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து உள்ளது. இதே தினத்தில் கியா நிறுவனமும் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. i4

    புதிய i4 எலெக்ட்ரிக் செடான் இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் iX எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. iX மற்றும் i4 தவிர பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மினி கூப்பர் SE மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய i4 மாடல் ஆடம்பர பிரிவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் செடான் ஆகும். 

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் இடிரைவ் 40 வேரியண்டில் கிடைக்கிறது. இந்த காரில் 81.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இது 330 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்கள் ஆகும்.
    டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 1200 மாடலினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டிரையம்ப் டைரக் 1200 மாடலுக்கான டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    டீசர் வெளியானதை தொடர்ந்து புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போது டீசர் மட்டும் வெளியாகி உள்ளது. டீசரில் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    டிரையம்ப் டைகர் 1200

    புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கி விட்டது. சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் ரேலி மற்றும் GT என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையிலும் டிரையம்ப் டைகர் 1200 இரு வேரியண்ட்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடலில் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 1,160 சிசி, இன்-லைன், 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ ஸ்பெஷல் எடிஷன் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்தியாவில் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன்பே புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் விற்பனையகம் வரத் துவங்கி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    புகைப்படங்களின் படி ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடல் டொர்னாடோ ரெட் நிறம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலை விட வித்தியாசமானதாக மாற்ற மாண்ட் கர்லோ எடிஷனில் மாண்ட் கதர்லோ பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், கிளாஸ் பிளாக் ரூஃப், ORVM-கள், ரூப் ரெயில்கள், முன்புற கிரில், புதிய அலாய் வீல்கள், முன்புற ஃபெண்டரில் மாண்ட் ககர்லோ பேட்ஜிங் உள்ளது.

     ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன்
    Photo Source: TeamBHP.com

    இத்துடன் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஹெட்லேம்ப்கள், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம், சப் வூஃபர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.0 லிட்டர் யூனிட், 150 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த ஆண்டு முற்றிலும் புதிய 5th Gen ரேன்ஜ் ரோவர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், தற்போது மேம்பட்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்ய லேண்ட் ரோவர் முடிவு செய்து இருக்கிறது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் மே 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    மேலும் இந்த மாடலுக்கான டீசரையும் லேண்ட் ரோவர் வெளியிட்டு உள்ளது. டீசர்களில் புதிய லேண்ட் ரோவர் ஸ்போர்ட் வெளிப்புற டிசைன், செண்ட்ரல் கன்சோல் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தனி டீசர் வீடியோவில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் ஆஃப் ரோடிங் திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

     ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    வெளிப்புறத்தில் புதிய லேண்ட் ரோவர் ஸ்போர்ட் மாடல் மிக மெல்லிய ஹெட்லேம்ப்கள், முன்புற ஃபெண்டர் மற்றும் ஏ பில்லர் உள்ளிட்டவை டீசரில் காட்டப்படுகின்றன. அதன்படி புதிய ஸ்போர்ட் மாடலிலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5th Gen ரேன்ஜ் ரோவர் மாடலை தழுவிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
    ×