என் மலர்

  நீங்கள் தேடியது "Range Rover Sport"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது.  ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் லேண்ட் ரோவர் ஸ்போர்ட் எஸ்.யு.வி. காரை புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது. 

  இந்த என்ஜின் எஸ். எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. உள்ளிட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ட்ரிம்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 292.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

  இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடலுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய என்ஜினுடன் அறிமுகமாகி இருக்கும் 2019 மாடல் மேலும் அதிகளவு வாடிக்கையாளர்களை கவரும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்தார்.  என்ஜின் தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த வாகனத்தில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., முன்புறம் கருப்பு நிற கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கேரக்டர் லைன் பொனெட் முதல் காரின் பின்புறம் வரை வழங்கப்படுகிறது.

  இத்துடன் பானரோமிக் சன்-ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே (ஹெச்.யு.டி.) மற்றும் ஜாகுவாரின் டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

  புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 254.79 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. புதிய கார் விலை இந்தியாவில் ரூ.86.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×