search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    பி.எம்.டபிள்யூ. i4
    X
    பி.எம்.டபிள்யூ. i4

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் செடான் அறிமுகம் - வெளியீடு எப்போ தெரியுமா?

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை இந்தியா ஆர்ட் ஃபேர் நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் புதிய i4 எலெக்ட்ரிக் மாடல் மே 26 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து உள்ளது. இதே தினத்தில் கியா நிறுவனமும் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. i4

    புதிய i4 எலெக்ட்ரிக் செடான் இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் iX எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. iX மற்றும் i4 தவிர பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மினி கூப்பர் SE மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய i4 மாடல் ஆடம்பர பிரிவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் செடான் ஆகும். 

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் இடிரைவ் 40 வேரியண்டில் கிடைக்கிறது. இந்த காரில் 81.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இது 330 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்கள் ஆகும்.
    Next Story
    ×